www.garudabazaar.com

"ஒரு சின்ன 'கிஃப்ட்'ங்க.." பென்ஸ் காரை பரிசளித்த சஞ்சீவ் - ஆல்யா மானசா.. யாருக்கு தெரியுமா..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் 'ராஜா ராணி 2' சீரியலில், சந்தியா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஆல்யா மானசா.

sanjeev and alya manasa gifts his benz car to brother

அடிப்படையில், டான்சரான ஆல்யா, ராஜா ராணி முதல் பாகத்தில் நாயகியாக அறிமுகமாகி இருந்தார்.

இதில் செம்பா என்னும் கதாபாத்திரத்தில் வரும் ஆல்யா, வீட்டில் வேலை செய்யும் பெண்ணாக வந்து, ரசிகர்கள் மனதில் இடம்பிடித்திருந்தார்.

ரியல் லைஃபிலும் காதல்

இதனைத் தொடர்ந்து, ராஜா ராணி முதல் பாகத்தில், தன்னுடைய கணவராக நடித்திருந்த சஞ்சீவை நிஜ வாழ்க்கையிலும் காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆல்யா. காதலுக்கு ஆல்யா வீட்டில் அதிகம் எதிர்ப்பு கிளம்பி இருந்த நிலையில், அவை அனைத்தையும் மீறி, காதலன் சஞ்சீவை கரம் பிடித்திருந்தார்.

ராஜா ராணி 2

சஞ்சீவ் - ஆல்யா மானசா தம்பதியினருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததன் காரணமாக, சீரியலில் நடிப்பதில் சிறிய இடைவெளி எடுத்துக் கொண்ட ஆல்யா மானசா, தற்போது மீண்டும் ராஜா ராணி 2 தொடரில் நடித்து வருகிறார். இன்னொரு பக்கம், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'கயல்' சீரியலில் சஞ்சீவ் நடித்து வருகிறார்.

பென்ஸ் கார் பரிசு

இதற்கிடையில், இரண்டாவது முறையாக கர்ப்பம் ஆகியுள்ள ஆல்யா மானசா, விரைவில் ராஜா ராணி 2 தொடரில் இருந்து பிரேக் எடுத்துக் கொள்வார் என்றும் கூறப்பட்டது. ஆனால், மறுபக்கம்  தொடர்ந்து, சீரியலில் நடிப்பேன் என்றும் ஆல்யா தெரிவித்திருந்தார். இந்நிலையில், சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடி, தங்களின் மெர்சிடிஸ் சி க்ளாஸ் பென்ஸ் காரினை, ஒருவருக்கு பரிசளித்துள்ளது பற்றி, இன்ஸ்டாகிராமில் தகவல் பகிரப்பட்டுள்ளது.

வைரலாகும் இன்ஸ்டா பதிவு

அதாவது, தன்னுடைய சகோதரர் சமீருக்கு இந்த காரினை பரிசளித்துள்ளார் சஞ்சீவ். இது தொடர்பான புகைப்படங்களை சஞ்சீவ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக, சஞ்சீவ் - ஆல்யா ஜோடியின் ரசிகர்கள், தங்களின் கருத்துக்களை இன்ஸ்டா பதிவின் கீழ் குறிப்பிட்டு வருகின்றனர்.

 

தொடர்புடைய இணைப்புகள்

sanjeev and alya manasa gifts his benz car to brother

People looking for online information on Alya Manasa, Benz, Raja Rani Serial, Sanjeev will find this news story useful.