'96' ஆதித்யா பாஸ்கர் & Crew நடிக்கும் Meme Boys.. மீம்ஸ்ல கல்லூரி புரட்சியா.?
முகப்பு > சினிமா செய்திகள்மீம் பாய்ஸ் எனும் தொடரை சோனி லிவ் தம்முடைய அடுத்த முக்கியமான தொடராக ஸ்ட்ரீம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

Also Read | நாய் குட்டியுடன் ஸ்டைலிஷ் போட்டோ ஷூட்டில் அசத்திய கீர்த்தி சுரேஷ்.. செம்ம வைரல் வீடியோ!
ராஜீவ் ராஜாராம், த்ரிஷ்யா கௌதம் ஆகியோரால் உருவாகியுள்ள இந்தத் தொடரை, அருண் கௌஷிக் இயக்கியிருக்கிறார். நடிகர்கள் குரு சோமசுந்தரம், படவா கோபி, ஆதித்யா பாஸ்கர், சித்தார்த் பாபு, ஜெயந்த், நம்ரிதா மற்றும் நிகில் நாயர் உட்பட பலர் நடித்துள்ளனர்.
விஜய் சேதுபதி நடித்த 96 திரைப்படத்தில் இளம் வயது விஜய் சேதுபதியாக நடித்தவர் ஆதித்யா பாஸ்கர். இவர் பிரபல நடிகரும் குரல் கலைஞருமான எம்.எஸ்.பாஸ்கரின் மகன். இவருடைய நடிப்பை 96 படத்தில் காண முடிந்தது. இந்நிலையில் ஆதித்யா பாஸ்கர் இந்த மீம் பாய்ஸ் படத்தில் முக்கிய முதன்மை கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார்.
ரெயின்ஷைன் ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. கோகுல் கிருஷ்ணா ஷோ ரன்னராக பணியாற்றுகிறார். ஜெகதீஸ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்யும் இந்த தொடருக்கு, கோபால் ராவ் இசை அமைக்கிறார்.
கல்லூரியில் புரட்சியை உருவாக்கும் கதையாக உருவாகியிருக்கும் இந்த, ’மீம் பாய்ஸ்’ என்கிற வெப் தொடர், சோனி லிவ் தளத்தின் ஒரிஜினல் படைப்பாக, உருவாகி இருக்கிறது. இந்தத் தொடரின் டீஸர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
நான்கு கல்லூரி மாணவர்கள் ஒரு மீம் பேஜ் நடத்தும்போது, அதில் அடக்குமுறை, அராஜகம் மிகுந்த கல்லூரி நிர்வாகத்தை நகைச்சுவையாக நைய்யாண்டி செய்துவிட, இந்த விவகாரம் சூபிடித்து - தற்செயலாக கல்லூரி முழுவதும் பெரிய புரட்சியையே உண்டுபண்ணிவிடும் கதையாக மீம் பாய்ஸ் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Also Read | இசை அமைப்பாளராகும் இயக்குநர் மிஷ்கின்.. படத்துக்கு டைட்டில் இதான்..! முழு விபரம்.!