www.garudabazaar.com
iTechUS

கர்ப்பமாக இருந்ததன் நினைவாக வயிற்றுக்கு சிலை.. நடிகை நமீதா பகிர்ந்த வைரல் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை நமீதா, தனது கர்ப்பமான வயிற்றை சிலையாக வடித்துள்ளார்.

Namitha Latest Instagram video about Her pregnancy

Also Read | துணிவு படத்தில் இடம்பெற்ற மங்காத்தா References.. ரசிகர்கள் மத்தியில் டிரெண்டாகும் காட்சிகள்!

தமிழ் சினிமாவில் விஜயகாந்துக்கு ஜோடியாக எங்கள் அண்ணா (2004) படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை நமீதா. அதன் பிறகு பல படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். முன்னணி நடிகர்களான அஜித்,விஜய் ஆகியோர் நடித்த முறையே பில்லா மற்றும்  அழகிய தமிழ் மகன் ஆகிய படங்களில் தோன்றி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்

சத்ய்ராஜ், சரத்குமார்,லாரன்ஸ், பிரசாந்த, எஸ்.ஜே சூர்யா உள்ளிட்ட நடிகர்களுடனும் ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். பிக்பாஸ் சீசன்-1 ல் போட்டியாளராகவும் தடம் பதித்தவர். நமிதா, 2019ல் பாஜக கட்சியில் இணைந்து அரசியலிலும் செயல்பட்டு வருகிறார்.

நமீதா, வீரேந்திரா சௌத்ரி என்பவரை கடந்த 2017 ஆம் ஆண்டு திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு முன் நடிகை நமீதா தனது 41வது பிறந்தநாளை முன்னிட்டு, தான் கார்ப்பமாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

சில நாட்களுக்கு முன் தனக்கு இரட்டை ஆண் குழந்தைகள் (கிருஷ்ண ஆதித்யா, கியான் ராஜ்) பிறந்துள்ளன என அறிவித்திருந்தார்.  குரோம் பேட்டை ரீலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் மருத்துவர்களுக்கு நன்றியும் தெரிவித்தார்.

இந்நிலையில் நமீதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், தனது கர்ப்பகாலத்தை என்றும் நினைவில் வைத்திருக்க, கர்ப்பமான வயிற்றில் கை வைத்தபடி தான் இருக்கும் நிலையை சிலையாக வடித்து நமீதா வீட்டில் வைத்துள்ளார்.

Also Read | இத்தனை கேக்கா.. கலக்கலான பிறந்தநாள் பார்ட்டியில் டான்ஸ்.. அசத்திய ஐஸ்வர்யா ராஜேஷ் 😍..

தொடர்புடைய இணைப்புகள்

Namitha Latest Instagram video about Her pregnancy

People looking for online information on Namitha, Namitha Latest Instagram video, Pregnancy will find this news story useful.