Pattamboochi

ஆலியா பட் வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி…. ரசிகர்கள் வாழ்த்து… வைரலாகும் புகைப்படம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆலியா பட் பகிர்ந்துள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் வாழ்த்துகளைப் பெற்று வருகிறது.

Alia bhatt announced her pregnancy viral picture

ஆலியா பட்

பாலிவுட்டின் பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான மகேஷ் பட் மற்றும் பிரிட்டிஷ் நடிகை சோனி ரஸ்தான் இவர்களின் மகள் ஆலியா பட். குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ள இவர் 2012ஆம் ஆண்டு கரண் ஜோகர் இயக்கத்தில் வெளியான ஸ்டுடென்ட் ஆஃப் தி இயர் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து இவர் நடித்த Two States, Highway, Udta Punjab, Raazu, Gully boy போன்ற பல படங்கள் இவரை பாலிவுட்டின் முக்கிய இடத்தில் சேர்த்தது. சமீபத்தில் இவர் நடித்த  Gangubhai khaidwadi படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

குறிப்பாக இம்தியாஸ் அலியின் ஹைவே படம், ஏ. ஆர். ரகுமானின் இசையில் பெரிய வரவேற்பை பெற்றது. ஆலியாவை நடிகையாக மட்டுமல்லாமல் சிறந்த பாடகியாகவும் உலகம் அறிய செய்தது. கடைசியாக RRR படத்தில் சீதாவாக நடித்தார். ஆலியா பட் தற்போது ரன்பீர் கபூர், அமிதாப் பச்சன்  ஆகியோருடன் பிரம்மாஸ்திரா முதல் பாகம், ரன்வீர் சிங்குடன் ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி படத்திலும் ஆலியா நடித்து வருகிறார்.

Alia bhatt announced her pregnancy viral picture

காதலும் திருமணமும்

இவர், கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட்டின் சக நடிகரான ரன்பீர் கபூரைக் காதலித்து வந்தார். இதையடுத்து இந்த ஜோடி கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். மும்பை செம்பூரில் உள்ள ரன்பீர் வீட்டில் திருமணம் நடைபெற்றது. நெருங்கிய சினிமாத்துறை நண்பர்க்ள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கல்யாணத்துக்கு அழைக்கப்பட்டனர். திருமணப் புகைப்படங்களை ஆலியா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். கோர்ட் சூட்டில் ரன்பீர் கொண்டாட்டத்தில் காட்சியளிக்கிறார். கையில் மெஹந்தியுடன் ஆலியா இருந்தார். இந்தப் புகைப்படத்தில் இணையத்தில் வைரலாகின.

Alia bhatt announced her pregnancy viral picture

ஆலியா பட்  அறிவித்த செய்தி

இந்நிலையில் தற்போது ஆலியா பட் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்துள்ளார். மருத்துவமனையில் ரன்பீர் கபூருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர் “விரைவில் எங்கள் குழந்தை” என்று கூறியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக, ரசிகர்கள் மற்றும் திரையுலகப் பிரமுகர்கள் ஆலியா-ரன்பீர் தம்பதிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

 

தொடர்புடைய இணைப்புகள்

Alia bhatt announced her pregnancy viral picture

People looking for online information on Alia Bhatt, Pregnancy, Ranbir Kapoor will find this news story useful.