www.garudabazaar.com
iTechUS

"நடுக்கடல்ல 30 கோடி ரூபாய்க்கு வீடு".. கலாய்த்த அசிம், ADK.. ஜிபி முத்து கொடுத்த Thug Life 😅!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

GP Muthu Thug life answer to azeem and adk bigg boss house

Also Read | பிக் பாஸ் வீட்டிற்குள் Surprise என்ட்ரி கொடுத்த தனா.. அவங்க கையில் இருந்த டாட்டூவ கவனிச்சீங்களா!!

மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.

இதனைத் தொடர்ந்து, அகமது மீரான், சுரேஷ் சக்கரவர்த்தி, பிரபல விஜேக்கள் ஷோபனா மற்றும் பார்வதி உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தனர். பிக் பாஸ் போட்டியாளர்கள் பற்றி அவர்கள் தங்களின் விமர்சனத்தையும், அவர்களின் பாசிட்டிவ் கருத்துக்களையும் முன் வைத்து பேசி இருந்தனர். மேலும், இதே சீசனில் முன்பு வெளியேறி இருந்த போட்டியாளர்களான ராபர்ட், அசல் கோலார், ஜிபி முத்து, சாந்தி உள்ளிட்டோரும் பிக் பாஸ் வீட்டில் வருகை புரிந்துள்ளனர்.

GP Muthu Thug life answer to azeem and adk bigg boss house

அப்படி ஒரு சூழலில், பிக் பாஸ் வீட்டிற்குள் தற்போது தனலட்சுமியும், மணிகண்டாவும் சர்ப்ரைஸாக நுழைந்துள்ளனர். பிக் பாஸ் வீட்டில் சிறந்த போட்டியாளர்களாக வந்த தனலட்சுமி மற்றும் மணிகண்டா ஆகியோர், தற்போது மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளது பல போட்டியாளர்களை உற்சாகத்தில் திளைக்க வைத்துள்ளது. அனைவரும் அவர்களை கட்டித் தழுவி வரவேற்றிருந்த நிலையில், பழைய போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்து வருவது பார்வையாளர்களையும் உற்சாகம் அடைய வைத்துள்ளது.

GP Muthu Thug life answer to azeem and adk bigg boss house

இந்த நிலையில், சக போட்டியாளர்கள் மத்தியில் ஜிபி முத்து பேசும் விஷயங்கள், பார்வையாளர்களை சிரிப்பலையில் ஆழ்த்தி உள்ளது.

ஜிபி முத்துவிடம் கேட்கும் அசிம், "பிக் பாஸ் வீட்டுக்குள்ள போக ஒரு நாளைக்கு 10 லட்சம் ரூபா கேக்குறீங்களாமே" என கேட்கிறார். தொடர்ந்து பேசும் ஏடிகே, "ஒரு நாளுக்கு 25 லட்சம்" என தெரிவிக்கிறார். இதற்கு வேடிக்கையாக பதில் சொல்லும் ஜிபி முத்து, "நடுக்கடல்ல 30 கோடி ரூபாய்க்கு ஒரு வீடு கட்டி வெச்சுருக்கேன்" என கூறுகிறார்.

GP Muthu Thug life answer to azeem and adk bigg boss house

இதனைக் கேட்டதும் அனைவரும் சிரிக்கத் தொடங்கும் நிலையில், இன்னும் 35 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் நீங்கள் இருக்க வேண்டும் என வேடிக்கையாக அனைத்து போட்டியாளர்கள் கூறியதும் இதனை கேட்டு சற்று மிரண்டும் போகிறார் ஜிபி முத்து. இறுதியில், மீன் குழம்பு கொடுத்தால் நிச்சயம் அத்தனை நாட்கள் இருக்கலாம் என்றும் ஜிபி முத்து தெரிவிக்கிறார்.

Also Read | "நான் போனதுக்கப்புறம் அவ Focus கம்மி ஆயிடுச்சு".. ரச்சிதா பற்றி பேசிய ராபர்ட் மாஸ்டர்.. Bigg Boss

தொடர்புடைய இணைப்புகள்

GP Muthu Thug life answer to azeem and adk bigg boss house

People looking for online information on ADK, Azeem, Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, GP MUTHU, GP Muthu Thug life will find this news story useful.