நடிகா் சங்க தோ்தல் தேதி அறிவிப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தென்னிந்திய நடிகா் சங்கத் தோ்தல் வருகின்ற ஜூன் 23ம் தேதி சென்னை எம்.ஜி.ஆா் ஜானகி கல்லூரியில் நடைபெறும் என்று ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் அறிவித்துள்ளாா்.

Nadigar Sangam Election Date 23.06.2019

தென்னிந்திய நடிகா் சங்கத் தோ்தல் வருகின்றன ஜூன் 23ம் தேதி நடைபெறும் என்று ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் அறிவித்துள்ளாா்.

தென்னிந்திய நடிகா் சங்க பொருப்பாளா்களுக்கான பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், நடிகா் சங்க கட்டிடப் பணிகளை காரணம் காட்டி விஷால், நாசர் தலைமையிலான கூட்டணி தோ்தலை நடத்தாமல் இருந்தது இந்நிலையில், நடிகா் சங்கத் தோ்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் நியமிக்கப்பட்டாா்.

அதன்படி, தென்னிந்திய நடிகா் சங்கத் தோ்தல் வருகின்ற ஜூன் மாதம் 23ம் தேதி தோ்தல் நடைபெறும் என்று நீதிபதி பத்மநாபன் அறிவித்துள்ளாா். சென்னை அடையாறில் அமைந்துள்ள எம்.ஜி.ஆா். ஜானகி கல்லூரியில் தோ்தல் நடைபெறும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த தோ்தலில் வெற்றி பெற்ற விஷால், நாசா் தலைமையிலான கூட்டணி மீண்டும் அதே நபா்களுடன் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் தலைவா் பதவிக்கு நாசா், பொதுச் செயலாளா் பதவிக்கு விஷால், பொருளாளா் பதவிக்கு காா்த்தி என பழைய கூட்டணி மீண்டும் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.