Reliable Software
www.garudabazaar.com

'இந்த பொண்ண நியாபகம் இருக்கா?'.. சுல்தான் படத்தில் கூட நடிச்சிருக்காங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சரத்குமார் நடிப்பில் வெளியான நாட்டாமை படத்தில் நடிகர்கள் கவுண்டமணி செந்தில் இருவரும் காமெடி காட்சிகளில் கலக்கியிருப்பார்கள்.

Viral Naattamai Keerthi Naidu pics in sulthan movie

இதில் செந்தில் கவுண்டமணிக்கு அப்பாவாக நடித்திருப்பார். கவுண்டமணியின் தனது அடங்கமறுக்கும் அப்பாவை, ‘டேய் தகப்பா’ என சொல்லி அவ்வப்போது ரெய்டு விடுவார். இதற்கு முக்கிய காரணம் கவுண்டமணிக்கு பெண் பார்க்க செல்லும் இடத்தில் வரும் பெண்களின் அம்மாக்கள் எல்லாமே கவுண்டமணிக்கு சித்திகளாகிவிடுவர்.

இதனால் டேய் தகப்பா இது உனக்கே நியாயமா? உனக்கெல்லாம் ஒரு பிளாஷ்பேக்கா? என கவுண்டமணி செந்திலை கடிந்துகொள்வார். அப்படி கவுண்டமணி பெண் பார்க்க செல்லும் காட்சியில் ஒரு பெண்ணை அவருக்கு பிடித்துவிடும். ஆனால் அந்த பெண்ணும் கவுண்டமணிக்கு தங்கை முறை ஆகிவிடும் என செந்தில் சொல்வார். அந்த பெண்ணும் செந்திலை உடனே அண்ணே! என சொல்வார். அந்த பெண்ணை அந்த காமெடி சீன்களைத் தாண்டி பெரிதாக பார்த்திருக்க முடியாது.

பிரபல தெலுங்கு சீரியல் நடிகையும் டிவி தொகுப்பாளினியுமான அவர் தற்போது கார்த்தி நடிப்பில் வெளியாகியுள்ள சுல்தான் திரைப்படத்தில் ரஷ்மிகா மந்தனாவுடன் சேர்ந்து நடித்துள்ளார்.

அந்த நடிகைதான் கீர்த்தி நாயுடு. சுல்தான் படத்தின் டிரெய்லரின் ஒரு காட்சியிலேயே தோன்றும் கீர்த்தி நாயுடு, படத்தில் ரஷ்மிகா மந்தனாவின் பின்னணியில் நடித்துள்ளார். இதனிடையே ரஷ்மிகாவுடன் கீர்த்தி நாயுடு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

அத்துடன் கீர்த்தி நாயுடுவின் இப்போதைய புகைப்படங்களை பார்த்த பலரும், ‘நாட்டாமை’ படத்தில் கவுண்டமணி பெண் பார்க்கும் காட்சியில் வரும் பெண்ணா இவர்? இப்போது வேறலெவலில் இருக்கிறாரே? என கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர். 

ALSO READ: 'பிரபல சீரியலில் தோன்றும் பிக்பாஸ் நடிகர் ஆரி!'.. Viral ஆகும் Promo!

தொடர்புடைய இணைப்புகள்

Viral Naattamai Keerthi Naidu pics in sulthan movie

People looking for online information on Karthi, KeerthiNaidu, Sulthan Tamil will find this news story useful.