Reliable Software
www.garudabazaar.com

'கார்த்திக் சுப்புராஜ்' தயாரிப்பில் வைபவ் நடிக்கும் புதிய படம்.. டைட்டிலுடன் வெளியான FirstLook!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வைபவ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய  படத்துக்கு 'பபூன்' என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

Karthik Subburaj Produce Vaibhav film buffoon first look பபூன்

'மேயாத மான்', 'பெண்குயின்' உள்ளிட்ட படங்களை அடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'பூமிகா' படத்தைத் தயாரித்துள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்.  இந்தப் படத்தின் நிறைவுப் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் அந்த படங்களைத் தொடர்ந்து வைபவ் நாயகனாக நடிக்கும் புதிய படத்தை கார்த்திக் சுப்பராஜ் தயாரித்து வருகிறார்.

Karthik Subburaj Produce Vaibhav film buffoon first look பபூன்

தனுஷ் நடிப்பில் 'ஜகமே தந்திரம்' படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருந்தார். இந்த படம் நெட்பிளிக்ஸில் வெளியாவது உறுதியாகியுள்ளது. இந்த படத்தைத் தொடர்ந்து விக்ரம் - துருவ் விக்ரம் இணையும் சியான்60 படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். லலித் குமார் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மின்னல் வேகத்தில் நடந்து வருகிறது.

Karthik Subburaj Produce Vaibhav film buffoon first look பபூன்

இதனிடையே கார்த்திக் சுப்பராஜ் தமது தயாரிப்பு நிறுவனமான 'ஸ்டோன் பெஞ்ச்' மூலம் திரைப்படங்களை தயாரித்து வரும் நிலையில், வைபவ் நடிக்கும் 'பபூன்' திரைப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பில் உருவாக்கி வருகிறார். இந்த படத்தை பேஸன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது. கார்த்திக் சுப்புராஜிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த அசோக் வீரப்பன் இயக்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளில் நடக்கிறது.

Karthik Subburaj Produce Vaibhav film buffoon first look பபூன்

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இப்போது வெளியாகியுள்ளது. காமெடி - ஆக்‌ஷன் - டிராமா பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ALSO READ: மியூசிக்ல மட்டுமில்ல... இதுலயும் பின்றாரே.. புகழ்ந்து தள்ளிய Chiyaan60 இயக்குநர்.. தரமான வீடியோ!

Karthik Subburaj Produce Vaibhav film buffoon first look பபூன்

People looking for online information on Buffoon, Buffoon Tamil, BuffoonFL, Karthik Subbaraj, Karthik Subburaj, Stone Bench Films, Vaibhav will find this news story useful.