Reliable Software
www.garudabazaar.com

சூர்யா தயாரிப்பில் மீண்டும் நடிக்கும் கார்த்தி... இயக்குனர் யார் தெரியுமா?... வைரல் தகவல்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் கார்த்தி. இவரின் படங்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை இவர் கொண்டுள்ளார். இவர் தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் சுல்தான் படத்திலும் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

actor karthi to act for suriya's 2D entertainment சூர்யா தயாரிப்பில் நடிக்கும் கார்த்தி

இந்நிலையில் நடிகர் கார்த்தி அடுத்து நடிக்கவுள்ள திரைப்படம் குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. கார்த்தி நடிப்பில் கொம்பன் படத்தை இயக்கிய முத்தைய்யாவுடன் இவர் மீண்டும் இணையவுள்ளார். கிராமத்து வேடங்கள் என்றாலே நடிகர் கார்த்திக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. பின்னி பெடலெடுத்து விடுவார். அதிலும் கிராமத்து கதைகளை கையாள்வதில் தேர்ந்தவரான முத்தையாவுடன் அவர் மீண்டும் இணைய இருப்பது ரசிகர்களிடம் நிச்சயம் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் என்று தெரிகிறது.மேலும் இந்த படத்தினை அவரது அண்ணன் சூர்யாவின் 2D எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மணிரத்னமின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வரும் கார்த்தி, அதன் ஷூட்டிங் தொடங்கும் முன்போ, அல்லது அந்த ஷூட்டிங்கை முடித்த பிறகோ, இதில் நடிப்பார் என எதிர்ப்பார்க்கபடுகிறது. தற்போது படத்தின் ப்ரீ ப்ரொடக்‌ஷன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றனவாம்.

Tags : Karthi

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

actor karthi to act for suriya's 2D entertainment சூர்யா தயாரிப்பில் நடிக்கும் கார்த்தி

People looking for online information on Karthi will find this news story useful.