Reliable Software
www.garudabazaar.com

"என்ன ரிப்ளை லாம் தடபுடலா இருக்கு.. நீங்களே அட்மினா இருங்க!" - Trend ஆன ஸ்டுடியோ கிரீன் அட்மின்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கார்த்தியின் பருத்தி வீரன் தொடங்கி, நான் மகான் அல்ல, சிறுத்தை, மெட்ராஸ், கொம்பன் உள்ளிட்ட படங்களை தயாரித்த நிறுவனம் ஸ்டுடியோ கிரீன்.

Studiogreen admin tweets trending fans Sulthan Komban Karthi

இந்நிறுவனம் அண்மையில் ஆர்யா நடிப்பில் உருவான டெடி திரைப்படத்தை தயாரித்து ஓடிடியில் வெளியிட்டிருந்தது. இந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தான்  தற்போது சுவராஸ்யமான ட்ரெண்டிங்கான விஷயம் ஒன்று நடந்துள்ளது. 

ஆம், ஸ்டுடியோ கிரீன் ட்விட்டர் பேஜின் அட்மின் , ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதும் ட்வீட்களுக்கு ரியாக்ட் பண்ணுவதும் வைரலாகி வருகிறது. குறிப்பாக கார்த்தியின் கொம்பன் படம் வெளியாகி 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதுபற்றிய ட்வீட்டும் பதிவிடப்பட்டது.

இந்நிலையில் சென்னை, பாடி கிரீன் சினிமாஸிற்கு சுல்தான் பட வெளியீட்டை ஒட்டி நாளை (ஏப்ரல் 2)கார்த்தி எத்தனை மணிக்கு வருகிறார் என்ற ரசிகர் கேள்விக்கு, ‘காலை 5 மணி’ என்றும், கொம்பன் பட நினைவாக செலிபிரேஷன் போஸ்டர் மற்றும் வீடியோ இல்லையா என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு  ‘வீடியோ ரெடி ஆயிட்டு இருக்கு ப்ரோ’ என்றும், “என்னனே ஆளே மாறிட்ட.. ரிப்ளை லாம் தடபுடலா இருக்கு!” என்கிற ரசிகரின் பாராட்டுக்கு ‘சில பல ஸ்மைலிகளும்’ பதிலாக தரப்பட்டுள்ளன.

இன்னும் சில ரசிகர்கள், “நீங்களே அட்மினா இருங்க!” என்றும், “முதல்வன் பட பாணியில் இது ஒரு நாள் அட்மினா? என்னப்பா இது டெஸ்ட் டிரைவா” என்றும் கேட்டுள்ளனர்.

அதற்கு அந்த அட்மினோ, ‘லாங் டிரைவ்’ என்றும் பதிலிட்டுள்ளார். இன்னும் சிலர் அட்மின் புதுசா என கேட்க அவரோ ஆம் என்று சொல்ல, சில ரசிகர்கள், ‘எவனோ நம்ம பையன் தான்’ என குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக ஒரு ரசிகர், ‘அட்மின் ஒரு பொண்ணோ’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

ALSO READ: சிவாங்கி என்ன செஞ்சாலும் க்யூட் தான்.... ரசிகர்களிடையே வைரல் ஆகும் வீடியோ!

Studiogreen admin tweets trending fans Sulthan Komban Karthi

People looking for online information on Studio green will find this news story useful.