Reliable Software
www.garudabazaar.com

"சின்ன வயசுல சூர்யாவை இப்படி தான் வெறுப்பேத்துவேன்"... கார்த்தி பகிர்ந்த குறும்பு பதிவு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் நடிகை ஜோதிகாவை 2006-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில்  திரையுலகினர் மத்தியில் மிகவும் கொண்டாடப்பட்ட படம் சூர்யாவின் 'சூரரைப் போற்று'. சூர்யாவின் அசுரத்தமான நடிப்பு, அப்பர்னாவின் யதார்தம், சுதா கொங்கராவின் துல்லியமான இயக்கம், ஜி.வி.பிரகாஷின் ஆர்ப்பரிக்கும் இசை, நிக்கத் பொம்மியின் எதார்த்தமான ஒளிப்பதிவு என அனைத்து பிரிவுகளிலும் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியது. இந்தியாவில் முதன் முறையாக பட்ஜெட் பிளைட்டை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத் என்பவரின் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தார். இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் சூரரைப் போற்று படத்திற்கு முக்கிய இடம் உண்டு.

actor karthi share childhood picture wiith suriya நடிகர் கார்த்தி பகிர்ந்த குறும்பு பதிவு

அதேபோல் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் கார்த்தி. இவரின் படங்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை இவர் கொண்டுள்ளார். இவர் தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் சுல்தான் படத்திலும் நடித்து முடித்துள்ளார். இப்படி நடிகர் சிவகுமாரின் மகன்களான சூர்யாவும் கார்த்தியும் தமிழ் சினிமாவின் முக்கிய நாயகர்களாக வலம் வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கார்த்தி சிறு வயதில் தனது அண்ணனுடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை தற்போது பகிர்ந்துள்ளார். மேலும் மறக்கமுடியாத சில நினைவுகளையும் பகிர்ந்துள்ளார். அவர் கூறும்போது "எனது அண்ணனை வெறுப்பேற்ற ஒரே வழி, அவர் அணிந்திருக்கும் சட்டையை போலவே நானும் அணிந்து கொள்வேன். மீண்டும் அப்படி முயற்சி செய்ய ஆசையாக இருக்கிறது. நீங்களும் உங்கள் சகோதரர்களுடன் இப்படி உடை அணிந்தது உண்டா?" என்று பதிவிட்டுள்ளார்.

actor karthi share childhood picture wiith suriya நடிகர் கார்த்தி பகிர்ந்த குறும்பு பதிவு

Tags : Surya, Karthi

தொடர்புடைய இணைப்புகள்

actor karthi share childhood picture wiith suriya நடிகர் கார்த்தி பகிர்ந்த குறும்பு பதிவு

People looking for online information on Karthi, Surya will find this news story useful.