Reliable Software
www.garudabazaar.com

Video: “KGF மாதிரி Sulthan-லயும் இப்படி ஒரு விஷயம் இருக்கு”.. அப்போ தெறிக்க போகுது! 'கருடா' ராம் Exclusive!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கேஜிஎஃப் வில்லனாக கருடாவாக மிரட்டிய ராம் என்கிற ராமச்சந்திர ராஜூ தனக்கே உரிய ஆஜானுபாகுவான உறுதியான உடற்கட்டுடன் அதே சமயம் ஜாலியாக Behindwoods-ல் சுல்தான் பட அனுபவங்களை பிரத்தியேகமாக பகிர்ந்துள்ளார்.

KGF VILLAIN Garuda Ram Exclusive over sulthan karthi Video

அதில், “சுல்தான் திரைப்படம் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகிறது. நீங்கள்தான் பார்த்து சொல்ல வேண்டும் எப்படி வந்திருக்கிறது என்று. இந்தப்படத்திலும் KGF படத்தில் இருப்பது போலவே RAW -வான ஒரு வில்லனிசம் இருக்கும். அந்த படத்தில் பார்த்து எப்படி பயந்தார்களோ அது போலவே வில்லனிசம் சுல்தானிலும் மிரட்டலாக இருக்கும்.

கார்த்தி சாரை முதலில் இருந்தே கவனித்து வந்தேன். சிறுத்தை, பையா, நான் மகான் அல்ல, கைதி வரையிலுமான அனைத்து படங்களிலும் நான் பார்த்து வந்திருக்கிறேன். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் எனக்கு மிகப் பெரிய இன்ஸ்பிரேஷன். அவருடைய உழைப்பும் போராட்டமும் எனக்கு நன்றாகவே தெரியும். அவர் தனக்கென்று ஒரு தனி பாணியை உருவாக்கி கொண்டார்.

அவருடன் படம் நடிப்பதை நான் பெருமிதமாக உணர்கிறேன். கேஜிஎஃப் படத்துக்குப் பிறகு எனக்கு கிடைத்த வாய்ப்பு சுல்தான். யார் ஹீரோ என்று கேட்டபோது கார்த்தி சார் என்று தெரிந்ததும் குஷி ஆகிவிட்டேன்” என்று பேசியுள்ளார்.

மேலும் மனைவிக்கு மட்டுமே தான் பயப்படுவதாகவும் ஜாலியாகக் குறிப்பிடும் கருடா ராமின் முழு நேர்காணலை இணைப்பில் உள்ள காணொளியில் காணலாம்.

VIDEO: “KGF மாதிரி SULTHAN-லயும் இப்படி ஒரு விஷயம் இருக்கு”.. அப்போ தெறிக்க போகுது! 'கருடா' ராம் EXCLUSIVE! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

KGF VILLAIN Garuda Ram Exclusive over sulthan karthi Video

People looking for online information on Garuda, Karthi, KGF Tamil, Ramachandra Raju, Sulthan Tamil will find this news story useful.