LIGER D Logo Top
www.garudabazaar.com

திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ் எழுதிய "மயக்கமா கலக்கமா" பாடல்.. வெளியான செம LYRIC VIDEO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தனுஷ் நடிப்பில் சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், உருவாகி உள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம்.

Dhanush Thiruchitrambalam Movie Mayakama Kalakama Lyrical Video

Also Read | போடு.. BOX OFFICE-ல் பட்டையை கிளப்பிய 'சீதா ராமம்'..‌ அடுத்து இந்த மொழியிலும் ரிலீஸ் ஆகுதாம்!

இப்படம் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. 

இப்படத்தின் தமிழக உரிமத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றி உள்ளார். இந்த படம் தமிழகம் முழுவதும் 300 திரையரங்குகளில் வெளியானது. சென்னையில் 19 திரையரங்குகளிலும், செங்கல்பட்டு ஏரியாவில் 35 திரையரங்குகளிலும், சேலம் ஏரியாவில் 28 திரையரங்குகளிலும், திருநெல்வேலி கன்னியாகுமரி ஏரியாவில் 27 திரையரங்குகளிலும், திருச்சி மற்றும் மதுரை ஏரியாவில் தலா 38 திரையரங்குகளிலும், கோயம்புத்தூர் ஏரியாவில் 51 திரையரங்குகளிலும், வட ஆற்காடு ஏரியாவில் 39 திரையரங்குகளிலும், தென் ஆற்காடு ஏரியாவில் 25 திரையரங்குகளிலும் திருச்சிற்றம்பலம் படம் வெளியாகி உள்ளது.

Dhanush Thiruchitrambalam Movie Mayakama Kalakama Lyrical Video

'திருச்சிற்றம்பலம்' படத்தில்   திருச்சிற்றம்பலம் எனும் டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜூம் முக்கிய வேடத்தில் தனுஷின் தாத்தா & அப்பாவாக முறையே நடித்துள்ளனர்.

மேலும் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு  ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்  ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரசன்னா படத்தொகுப்பு செய்துள்ளார்.

Dhanush Thiruchitrambalam Movie Mayakama Kalakama Lyrical Video

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற மயக்கமா கலக்கமா பாடல் வரி வீடியோ வெளியாகி உள்ளது. இந்த பாடலை அனிருத் இசையில் தனுஷ் எழுதி உள்ளார். தற்போது இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Also Read | VIDEO: தேசிய விருது வென்ற நடிகையுடன் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படம்.. வெளியான தெறி மாஸ் அப்டேட்!

திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ் எழுதிய "மயக்கமா கலக்கமா" பாடல்.. வெளியான செம LYRIC VIDEO! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Thiruchitrambalam Movie Mayakama Kalakama Lyrical Video

People looking for online information on Dhanush, Dhanush Thiruchitrambalam Movie, Mayakama Kalakama Lyrical Video, Thiruchitrambalam will find this news story useful.