www.garudabazaar.com

பிரபல OTT-க்கு தமன்னா நடிக்கும் புதிய PAN INDIA படம்.. ரசிகர்களை கவரும் மெர்சலான தமிழ் டிரெய்லர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை தமன்னா நடிக்கும் புதிய பான் இந்திய படத்தின் படத்தின் டிரெய்லர்  வெளியாகி உள்ளது.

Tamannaah Bhatia Starring Babli Bouncer Movie Tamil Trailer

Also Read | 'விக்ரம் வேதா' படத்தின் இந்தி ரீமேக்.. OTT உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! சூப்பர் தகவல்

பல தேசிய விருதுகளை வென்ற இயக்குனர் மதுர் பண்டர்க்கார், பெண்களை முதன்மைப்படுத்தும் சிறப்பு வாய்ந்த கதைகளை வழங்குவதில் சிறந்த படைப்பாளியாக பாலிவுட்டில் அறியப்படுபவர்.

தமன்னா நடிப்பில் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் மற்றும் ஜங்லீ பிக்சர்ஸ் இரண்டும் இணைந்து தயாரிக்கும் இந்த பப்லி பௌன்சர் திரைப்படம் வட இந்தியாவின் உண்மையான 'பவுன்சர் நகரமான' அசோலா ஃபதேபூரை கதைக்களமாகக் கொண்ட  ஒரு பெண் பவுன்சரின் கற்பனைக் கதையாகும்.

Tamannaah Bhatia Starring Babli Bouncer Movie Tamil Trailer

பிப்ரவரி 18 அன்று இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதம் நிறைவடைந்தது.

இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் டப்பிங் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து படம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.

இந்த படத்தில் தமன்னா உடன் சவுரப் சுக்லா, அபிஷேக் பஜாஜ் மற்றும் சாஹில் வைத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கதை மற்றும் திரைக்கதையை அமித் ஜோஷி, ஆராதனா தேப்நாத் மற்றும் மதுர் பண்டர்கார் எழுதி உள்ளனர்.

Tamannaah Bhatia Starring Babli Bouncer Movie Tamil Trailer

இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி உள்ளது. காமெடி மற்றும் ஆக்சன் டிராமா காட்சிகள் படத்தின் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளன.

வரும் செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில் இந்த படம் வெளியாக உள்ளது என்று படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Also Read | சல்மான் கான் & பூஜா ஹெக்டே நடிக்கும் புதிய படம்.. படத்தின் பெயரை மாற்றிய படக்குழு! மாஸ் டீஸர்

பிரபல OTT-க்கு தமன்னா நடிக்கும் புதிய PAN INDIA படம்.. ரசிகர்களை கவரும் மெர்சலான தமிழ் டிரெய்லர்! வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Tamannaah Bhatia Starring Babli Bouncer Movie Tamil Trailer

People looking for online information on Babli Bouncer, Babli Bouncer Tamil Trailer, Tamannaah Bhatia will find this news story useful.