’கலைஞர் வேடத்தில் நான்…’ - பயோபிக் படம் குறித்து உதயநிதி விளக்கம்
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Jan 05, 2020 07:30 PM
சீனு ராமசாமி இயக்கத்தில் ’கண்ணே கலைமானே’ படத்தில் நடித்த உதயநிதி ஸ்டாலின் அதைத் தொடர்ந்து மிஷ்கினின் இயக்கத்தில் டபுள் மீனிங் புரடக்ஷன்ஸ் தயாரிக்கும் ’சைக்கோ’ படத்தில் நடித்தார்.

இதில் அவருடன் அதிதி ராவ், நித்யா மேனன், இயக்குநர் ராம், ஷாஜி, சிங்கம்புலி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்துக்கு இளையராஜா இசையமைத்த ‘உன்ன நெனச்சு நெனச்சு’ பாடல் பெரும் வெற்றிபெற்றது.
வரும் ஜனவரி 24, 2020 அன்று இத்திரைப்படம் திரைக்கு வர உள்ளது. இதைத் தொடர்ந்து உதயநிதி அவரது தாத்தாவும் தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் பயோ பிக்கில் நாயகனாக நடிக்க உள்ளதாக செய்திகள் பரவின.
இந்த படத்தை ’என் காதலி சீன் போடுறா’ படத்தை இயக்கிய ராம் சேவா இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. சமூக வலைத்தளங்களில் பரவிய இந்த தகவலுக்கு உடனடியாக மறுப்பு தெரிவித்த உதயநிதி அதில் உண்மை இல்லை என்று கூறியுள்ளார்.