கௌதம் மேனன் வெளியிட்ட இளையராஜா - மிஷ்கினின் 'சைக்கோ' பாட்டு' - 'நீங்க முடியுமா'
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jan 06, 2020 03:58 PM
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து உருவாகியிருக்கும் படம் 'சைக்கோ'. டபுள் மீனிங் புரொடக்ஷன் தயாரித்துள்ள இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாக நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தில் சித் ஸ்ரீராம் பாடிய உன்ன நெனச்சு பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த பாடலை கபிலன் எழுதியிருந்தார்.
இந்த படத்தில் இயக்குநர் ராம், அதிதி ராவ், நித்யா மேனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தன்வீர் மிர் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் வருகிற ஜனவரி 24 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் இருந்து நீங்க முடியுமா என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலை இயக்குநர் கௌதம் மேனன் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக வெளியிட்டுள்ளார்.
கௌதம் மேனன் வெளியிட்ட இளையராஜா - மிஷ்கினின் 'சைக்கோ' பாட்டு' - 'நீங்க முடியுமா' வீடியோ