www.garudabazaar.com

உதயநிதி நடிப்பில் சைக்கோ-2 வருமா..? கலகத்தலைவன் விழாவில் போட்டுடைத்த மிஷ்கின்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் மகிழ் திருமேனியின் இயக்கத்திலான கலகத் தலைவன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

Mysskin Talks about Reuniting with Udhayanidhi Stalin

Also Read | படப்பிடிப்பில் சமையல் செய்து அசத்திய சூர்யா & மம்மூட்டி.. ரசிகர்களை கவரும் சூப்பர் போட்டோஸ்!

இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். 'மெட்ராஸ்' கலையரசனும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நடிகர் பிக்பாஸ் ஆரவ் வில்லனாக முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

ரெட் ஜெயன்ட் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலினே இந்தப் படத்தை தயாரிக்கிறார்.  இந்த படத்திற்கு அரோல் கொரேலி & ஸ்ரீகாந்த் தேவா இணைந்து இசையமைக்கிறார்கள். ஏற்கனவே இந்த படத்தின் மோஷன் போஸ்டர், டீஸர், சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் வரும் நவம்பர் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Mysskin Talks about Reuniting with Udhayanidhi Stalin

நடிகராக உதயநிதி ஸ்டாலின் கடைசியாக அருண்ராஜா காமராஜ் இயக்கத்திலான நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்தார். அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார்.

உதயநிதி ஸ்டாலின், தற்போது திமுக இளைஞரணி தலைவராகவும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராகவும் இருப்பதுடன் சினிமாவிலும் ஹீரோவாக நடித்து வருகிறார்.

அண்மையில் வெளியான ஆர்.ஆர்.ஆர், பீஸ்ட், டான் , காத்து வாக்குல ரெண்டு காதல், திருச்சிற்றம்பலம், விக்ரம், சர்தார், லவ் டுடே உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் முன்னணி திரைப்படங்களை தம்முடைய ரெட் ஜெயன்ட் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ரிலீஸ் செய்தார்.

Mysskin Talks about Reuniting with Udhayanidhi Stalin

இந்நிலையில் உதயநிதியின் கலகத் தலைவன் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் மிஷ்கின், "முதல் படம் உதயநிதிக்கு நான்தான் பண்ண வேண்டியது. உதயநிதியை பெரிய ஆக்சன் ஹீரோவாக உருவாக்கி இருப்பேன். சைக்கோ திரைப்பட உருவாக்கம் ஒரு அழகான அனுபவம். உதயநிதியுடன் பணியாற்றும் அனுபவம் சிறப்பாக இருக்கும். உதயநிதி மிகவும் எளிமையானவர்.  உதய் தான் அடுத்த கழகத்தலைவன். வருடத்தில் 100 நாளாவது சினிமாவில் நடியுங்கள் உதய். எல்லாரும் பார்ட்-2 னு சொல்றாங்க. சைக்கோ பார்ட்-2 எடுக்க முடியாது. உதயை வைத்து இன்னொரு நல்ல படம் எடுப்பேன்" என மிஷ்கின் பேசியுள்ளார்.

Also Read | தனுஷின் 'கேப்டன் மில்லர்' .. இணைகிறாரா பிரபல கன்னட சூப்பர் ஸ்டார்? அடுத்தகட்ட ஷூட் எப்போ..?

உதயநிதி நடிப்பில் சைக்கோ-2 வருமா..? கலகத்தலைவன் விழாவில் போட்டுடைத்த மிஷ்கின்.! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Mysskin Talks about Reuniting with Udhayanidhi Stalin

People looking for online information on Mysskin, Udhayanidhi Stalin will find this news story useful.