www.garudabazaar.com

மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்.. 'கலகத்தலைவன்' படத்தின் த்ரில்லான டிரெய்லர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கலகத்தலைவன் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

Kalaga Thalaivan Udhayanidhi Stalin New Movie Trailer Released

நடிகர் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் மகிழ் திருமேனியின் இயக்கத்திலான கலகத்தலைவன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். மெட்ராஸ் பட புகழ் கலையரசனும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்கள் போக, நடிகர் பிக்பாஸ் ஆரவ் வில்லனாக முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

Kalaga Thalaivan Udhayanidhi Stalin New Movie Trailer Released

ரெட் ஜெயன்ட் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலினே இந்தப் படத்தை தயாரிக்கிறார். உதயநிதியின் இந்த படத்திற்கு அரோல் கொரேலி & ஸ்ரீகாந்த் தேவா இணைந்து இசையமைக்கிறார்கள்.

ஏற்கனவே இந்த படத்தின் மோஷன் போஸ்டர், டீஸர், சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. ஸ்கின் டிரேடை மையாக வைத்து டிரெய்லர் காட்சிகள் த்ரில்லர் வகைமையில் அமைந்துள்ளன. ஆக்சன் காட்சிகளும் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளன. 1:50 நிமிடங்கள் ஓடும் இந்த டிரெய்லர் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 1 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது

Kalaga Thalaivan Udhayanidhi Stalin New Movie Trailer Released

நடிகராக உதயநிதி ஸ்டாலின் கடைசியாக அருண்ராஜா காமராஜ் இயக்கத்திலான நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்தார். அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார்.

உதயநிதி ஸ்டாலின், தற்போது திமுக இளைஞரணி தலைவராகவும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராகவும் இருப்பதுடன் சினிமாவில் நடித்து வருகிறார். அண்மையில் வெளியான ஆர்.ஆர்.ஆர், பீஸ்ட், டான் , காத்து வாக்குல ரெண்டு காதல், திருச்சிற்றம்பலம், விக்ரம், சர்தார், லவ் டுடே உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் முன்னணி திரைப்படங்களை தம்முடைய ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் மூலம் வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Kalaga Thalaivan Udhayanidhi Stalin New Movie Trailer Released

People looking for online information on Arav, BiggBoss Arav, Kalagathalaivan, MagilThirumeni, Nidhi Agarwal, Udhayanidhi Stalin will find this news story useful.