www.garudabazaar.com

விக்ரமன் பேச்சை கேட்டு மைனா சொன்ன விஷயம்.. என்னங்க சாபம்-லாம் விடுறாங்க😅..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Myna Nandhini Talks about Vikraman Future wife in BB House

Also Read | ரச்சிதா - அசீம் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்.. பரபரப்பான ஹவுஸ்மேட்ஸ்..!

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த வாரம் தங்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டில் வருகை தருவது அனைத்து போட்டியாளர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. மைனா நந்தினி, ஷிவின் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் தங்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வருகையால் கண் கலங்கவும் செய்கின்றனர்.

மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் மற்றும் அவரது குழந்தை ஆகியோர் வருகை தந்திருந்தனர். இதே போல ஷிவினின் நண்பர்கள் அங்கே வந்திருந்தனர். இது தவிர அமுதவாணன் மனைவி மற்றும் குழந்தைகளும், பின்னர் மணிகண்டா ராஜேஷை பார்க்க அவரது தாய், மனைவி, குழந்தை மற்றும் நடிகையும், சகோதரியுமான ஐஸ்வர்யா ராஜேஷூம் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளனர்.

அதே போல ரச்சிதாவை பார்க்க, அவரது தாய் மற்றும் சகோதரர் உள்ளிட்டோர் வருகைபுரிந்திருந்தனர். இதே போல, ADKவை பார்க்க அவரது தாய் மற்றும் தந்தை ஆகியோர் உள்ளே வந்திருந்தனர். இப்படி பிக்பாஸ் வீடு கலகலப்புடனும் நெகிழ்ச்சியான சம்பவங்களுடன் நிறைந்துகொண்டிருக்கின்றது.

இந்நிலையில், கார்டன் பகுதியில் விக்ரமன் மற்றும் மைனா ஆகியோர் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது விக்ரமன் கூறியவற்றை கேட்டுக்கொண்டிருந்த மைனா,"அவ்வளவு நடந்தீங்களா நீங்க?" என்கிறார். அப்போது, விக்ரமன் ஆம் என்பது போல தலையசைக்கிறார். உடனே மைனா,"நடிப்பு, நான் பார்க்கவே இல்லை" என்கிறார். இதற்கு பதில் சொல்லும் விக்ரமன்,"பார்க்காம எப்படி நடிப்புன்னு சொல்றிங்க?. பார்த்த விஷயத்துக்குதான் ஒருத்தரு கருத்து சொல்லணும். பார்க்காத விஷயத்துக்கு கருத்து சொல்லக்கூடாது" என சிரித்தபடியே சொல்கிறார்.

அப்போது மைனா,"உங்களுக்கு வரப்போற மனைவி எதுவுமே தெரியாம, எல்லாத்துக்கும் என்ன, என்னன்னு கேக்குற மாதிரி வரப்போறாங்க பாருங்க" எனச் சொல்ல விக்ரமன் "பரவாயில்லை" என்கிறார். தொடர்ந்து பேசும் மைனா,"உங்களுக்கு உங்க அப்பாவே பரவால்ல. அவர் ஜாலியா வந்தாரு, கலாய்ச்சாரு, சிரிச்சாரு போய்ட்டாரு. அம்மா சைலண்டா?" என்கிறார். அதற்கு விக்ரமன் "ஆமா, ஆனா பேசுவாங்க" என்கிறார்.

Also Read | ஷிவின் பத்தி அமுது - விக்ரம் பேசும்போது.. டக்குன்னு கோபப்பட்ட ரச்சிதா..!

தொடர்புடைய இணைப்புகள்

Myna Nandhini Talks about Vikraman Future wife in BB House

People looking for online information on Bigg Boss 6, Bigg boss 6 tami, Bigg Boss Tamil, Myna Nandhini, Vikraman will find this news story useful.