www.garudabazaar.com

நீங்க நியாயம் ஆனவன் மாதிரியும் மத்தவங்க.. புது ரவுண்டில் அசிம் Vs விக்ரமன்.. மீண்டும் மீண்டுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஆறாவது சீசன் நிகழ்ச்சியில் இந்த வாரம் Freeze டாஸ்க் சமீபத்தில் நடந்து முடிந்தது.

Vikraman azeem and amudhavanan speech in new task bigg boss

Also Read | "கோபத்துல பேசுனது, மனசுல வெச்சுக்காதீங்க".. அசிம் அப்டி சொன்னதும் விக்ரமன் அப்பாவின் பதில்!!

பிக் பாஸ் வீட்டில் உள்ள 9 போட்டியாளர்களின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் உள்ளிட்டோர் வந்து பகிர்ந்து கொண்ட விஷயம், பெரிய அளவில் வைரலாகி இருந்தது.

முந்தைய வார டாஸ்க்கிற்கு மத்தியில் குடும்பத்தினர் குறித்து பேசியும், அவர்களுக்காக கடிதங்கள் எழுதியும் நிறைய போட்டியாளர்கள் கண் கலங்கி போயிருந்தனர்.

அப்படி ஒரு சூழலில், இந்த வாரம் தங்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டில் வருகை தந்திருந்தது அனைத்து போட்டியாளர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி இருந்தது. மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் மற்றும் அவரது குழந்தை ஆகியோர் வருகை தந்திருந்தனர். இதே போல ஷிவினின் நண்பர்கள், அமுதவாணன் மனைவி மற்றும் குழந்தைகளும், மணிகண்டா ராஜேஷின் தாய், சகோதரியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராஜேஷ், மனைவி, குழந்தை உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்திருந்தனர்.

Vikraman azeem and amudhavanan speech in new task bigg boss

அதே போல ரச்சிதாவை பார்க்க, அவரது தாய் மற்றும் சகோதரரும், ஏடிகே, விக்ரமன் மற்றும் கதிரவனின் பெற்றோர்களும், அசிமின் சகோதரர் மற்றும் நண்பர் உள்ளிட்டோரும் பிக்பாஸ் வீட்டில் வருகை தந்திருந்தனர்.

மேலும் பிக் பாஸ் வீட்டில் வருகை தந்த போட்டியாளர்களின் குடும்பத்தினர், ஹவுஸ்மேட்ஸ் குறித்தும் நிறைய விஷயங்களை பேசி இருந்தனர். தங்களின் பேவரைட் போட்டியாளர்கள் யார் என்பது குறித்தும், எப்படி அவர்கள் கேம் ஆடுகிறார்கள் என்பது பற்றியும் தங்களது கருத்துக்களை அவர்கள் வெளிப்படுத்தி இருந்தனர்.

Vikraman azeem and amudhavanan speech in new task bigg boss

இந்த வார பிக் பாஸ் எபிசோடுகள் அமோக வரவேற்பையும் பார்வையாளர்கள் மத்தியில் பெற்றிருந்தது. இதற்கு மத்தியில், தற்போது டாஸ்க் முடிவுக்கு வந்துள்ளதையடுத்து, போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டில் தங்களின் தகுதி குறித்தும் ஒவ்வொருவராக பேசும் படி அறிவுறுத்தப்படுவதாக தெரிகிறது. இதில், ஒவ்வொருவரும் தங்களின் தகுதி மற்றும் விளையாட்டுத் திறன் குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.

Vikraman azeem and amudhavanan speech in new task bigg boss

அப்போது, அமுதவாணனிடம் ஷிவினை ஒரு முறை நாமினேட் செய்தது பற்றி கேள்வி ஒன்றை விக்ரமன் எழுப்புகிறார். இது தொடர்பாக கருத்துக்கள் எழ விக்ரமனிடம் கேள்வி கேட்கும் அமுதவாணன், "நீங்க எந்த இடத்துல யாரையும் தவறா பேசினது இல்ல அப்படின்னு சொல்றீங்க, ஆனா அசிம் கூட பிரச்சினை வந்த போது, 'ஹேய் என்ன பண்ற' ன்னு சொல்லி ஹேய்ன்னு சொன்னீங்க. அது தப்பா பேசலையா" என கேட்கிறார்.

Vikraman azeem and amudhavanan speech in new task bigg boss

இதற்கு விளக்கம் கொடுக்கும் விக்ரமன், "தட்டில் நான் காரி துப்புறேன். நீ சாப்பிடு என்று அசிம் சொன்னாரு" என முன்பு நடந்த டாஸ்க்கில் அசிமை அப்படி கூறியதற்கான காரணத்தை விக்ரமன் விளக்குகிறார். ஆனால் இது பற்றி ஆவேசமாக பேசும் அசிம், நான் சாப்பிடுவீர்களா என கேள்வி எழுப்பியதைத் தான் சாப்பிடுகிறாய் என நீங்கள் புள்ளி வைத்து முடித்து விளக்கம் கூறுகிறீர்கள் என்று முறையிடுகிறார். தொடர்ந்து பேசும் அசிம், "நீங்க நியாயமானவன் மாதிரியும் மற்றவர்கள் நியாயம் அற்றவர்கள் போன்றும் சித்திரிக்குறீங்க" என தனது கருத்தை அசிம் முன் வைக்கிறார்.

ஃபேமிலி டாஸ்க் கலகலவென இருந்த சூழலில் தற்போது மீண்டும் போட்டியாளர்கள் சற்று ஆவேசமாக கருத்துக்களை பரிமாறி வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read | விக்ரமனை கட்டியணைத்து அசிம் நண்பர் சொன்ன விஷயம்.. உடனே அமுது பண்ணத பாக்கணுமே!!

தொடர்புடைய இணைப்புகள்

Vikraman azeem and amudhavanan speech in new task bigg boss

People looking for online information on Amudhavanan, Azeem, Bigg Boss 6, Bigg boss 6 tami, Bigg Boss Freeze Task, Bigg Boss Tamil, Vikraman will find this news story useful.