www.garudabazaar.com

ரச்சிதா - அசீம் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்.. பரபரப்பான ஹவுஸ்மேட்ஸ்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Azeem argument over rachitha statement about him in Biggboss

Also Read | துணிவு படத்தில் நடிகர் பிரேம் குமார்.. வெளியான சூப்பர் கேரக்டர் லுக்..

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Azeem argument over rachitha statement about him in Biggboss

இந்த வாரம் தங்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டில் வருகை தருவது அனைத்து போட்டியாளர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. மைனா நந்தினி, ஷிவின் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் தங்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வருகையால் கண் கலங்கவும் செய்கின்றனர்.

மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் மற்றும் அவரது குழந்தை ஆகியோர் வருகை தந்திருந்தனர். இதே போல ஷிவினின் நண்பர்கள் அங்கே வந்திருந்தனர். இது தவிர அமுதவாணன் மனைவி மற்றும் குழந்தைகளும், பின்னர் மணிகண்டா ராஜேஷை பார்க்க அவரது தாய், மனைவி, குழந்தை மற்றும் நடிகையும், சகோதரியுமான ஐஸ்வர்யா ராஜேஷூம் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளனர்.

Azeem argument over rachitha statement about him in Biggboss

அதே போல ரச்சிதாவை பார்க்க, அவரது தாய் மற்றும் சகோதரர் உள்ளிட்டோர் வருகைபுரிந்திருந்தனர். இதே போல, ADKவை பார்க்க அவரது தாய் மற்றும் தந்தை ஆகியோர் உள்ளே வந்திருந்தனர். இப்படி பிக்பாஸ் வீடு கலகலப்புடனும் நெகிழ்ச்சியான சம்பவங்களுடன் நிறைந்துகொண்டிருக்கின்றது. இந்நிலையில், புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

Azeem argument over rachitha statement about him in Biggboss

அதில் ரச்சிதா பேசுகையில்,"அசீம் எப்போதுமே மற்றவர்களை இகழ்ந்து பேசுகிறார்" என சொல்ல, அவருக்கு எதிரே அமர்ந்திருந்த அசீம் அதனை மறுக்கிறார். மேலும், அவர் பேசுகையில் "என்னை அந்த வார்த்தை மூலமாக சித்தரிக்காதீர்கள். அப்படி பார்த்தால் சனிக்கிழமை ஆனா மட்டும் ரச்சிதாவுக்கு புது தைரியமும் உத்வேகமும் வருது. கமல் சார் முன்னாடி 'வந்த முதல் நாள்ல இருந்துன்னு' நீங்க சொல்ற எதையாவது என்கிட்ட சொல்லிருக்கீங்களா? கிடையாது. கமல் சார் முன்னாடி ரச்சிதா-விற்கு இருக்க தைரியம் எனக்கு ரொம்ப போலியா தெரியுது" என்கிறார். இதனை சக போட்டியாளர்கள் கவனித்துக்கொண்டிருக்கின்றனர்.

 

Also Read | பாத்ரூமில் வழுக்கிய அசிம்?.. சத்தம் கேட்டு பதறியடிச்சு ஓடிய கதிரவன்.. என்னங்க நடந்துச்சு?

தொடர்புடைய இணைப்புகள்

Azeem argument over rachitha statement about him in Biggboss

People looking for online information on Azeem, Bigg Boss 6, Bigg boss 6 tami, Bigg Boss Freeze Task, Bigg Boss Tamil, Rachitha will find this news story useful.