தளபதி விஜய்யின் வாத்தி கமிங் ஒத்து - இது மைனா நந்தினி வெர்ஷன்... என்ன ஆட்டம் ?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலம். இந்த தொடரில் நடித்த நடிகர்களை, அவர்கள் நடித்த கேரக்டரின் பெயராலேயே ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக அந்த தொடரில் 'மைனா' என்ற வேடத்தில் நடித்தவர் நந்தினி. இவர் ரசிகர்களால் மைனா என்றே அழைக்கப்படுகிறார். இவர் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்தில் தனது காமெடியான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.

இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் இருந்து வாத்தி கமிங் பாடலுக்கு தனது கணவர் யோகேஷ்வரன் மற்றும் தம்பி பாலசுப்ரமணியன் ஆகியோருடன் இணைந்து நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் அவரது டான்ஸை பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

@yogeshwaram_official @balasubramaniyanrajendran ❤️❤️😍❤️❤️vathi coming

A post shared by Nandhini Myna (@myna_nandhu) on

Entertainment sub editor