நம்ம சின்னத் தல ரெய்னா, பிரபல தமிழ் ஹீரோவிடம் கேட்ட உதவி... என்னனு பாருங்க

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸினால் பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. இருப்பினும் ஆங்காங்கே ஒரு சிலர் கொரோனா வைரஸில் இருந்து முற்றிலும் குணமாகி வீடு திரும்பும் செய்திகளும் வெளியாகி நம்பிக்கை அளித்து வருகின்றன.

இந்தியாவில் தற்போது 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் மக்கள் வீட்டிலேயே முடங்கும் சூழ்நிலையுள்ளது. இதனிடையே லாக் டவுன் நேரத்தில் பிரபலங்கள் பலரும் தங்கள் நேரத்தை எவ்வாறு செலவிடுகின்றனர் என்பதை சமூக வலைதளப்பதிவுகள் மூலம் தெரிவித்து வருகின்றனர். அவற்றில் பெரும்பாலானவை சுவாரஸியமானதாக இருக்கிறது.

அதன் ஒரு பகுதியாக நடிகர் துல்கர் சல்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீட்டில் தான் சமையல் செய்யும் ஃபோட்டோவை வெளியிட்டிருந்தார். அதற்கு பிரபல கிரிக்கெட் வீரரும் ரசிகர்களால் சின்ன தல என அழைக்கப்படுபவருமான சுரேஷ் ரெய்னா, ''செய்முறையை கூறுங்கள் சகோ, நானும் வீட்டில் முயற்சி செய்வேன்'' என்று கேட்டுக்கொண்டார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Chef Q ! #sundaycook #teppen #actingallbenihana #beensolong #wannasticktothisalso

A post shared by Dulquer Salmaan (@dqsalmaan) on

Entertainment sub editor