www.garudabazaar.com

எலிமினேஷன்க்கு பிறகும் பிக்பாஸ் வீட்டில் தீயாய் பறந்த ஜனனி டாப்பிக்.. இப்ப என்ன? bigg boss 6 tamil

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

HMs talks about Janany even after her elimination bigg boss 6

Also Read | "என்னது? அமுதவாணனோட ஒரு நாளைய சம்பளம் இவ்ளோவா?".. பரபரப்பாகும் டிஸ்கஷன்! bigg boss   

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, வைல்டு கார்டு எண்ட்ரியில் மைனா உள்ளிட்ட நபர்கள் பங்கேற்றனர்.

HMs talks about Janany even after her elimination bigg boss 6

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி, ராம், ஆயிஷா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.  கடைசிவாரத்தில் ஜனனி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

HMs talks about Janany even after her elimination bigg boss 6

இதில் ஜனனி எலிமினேஷன் ஆகியும், அவர் குறித்த பேச்சு பிக்பாஸ் வீட்டில் அதிகரித்துள்ளது,  அதன்படி, இனிமே போட்டியை வெளிப்படையாக விளையாட அமுதவாணன் முடிவெடுக்க, “யாரு வரணும்.. வரக்கூடாதுன்னு சொல்லி விளையாடுவதும் தப்பான ஆட்டம்” என்று விக்ரமன் கூற, அதை வழிமொழிந்த ஷிவின், “நானும் அதையே சொன்னேன்.

HMs talks about Janany even after her elimination bigg boss 6

ஜனனி போ.. போ..ன்னு அசிம் சொன்னாரு” என்று மீண்டும் பழைய டாப்பிக்கை தூசி தட்ட, “நீங்களும்தான் தனாவ போ.. போ..’ன்னு சொன்னீங்க” என அமுதுவும் கூறத் தொடங்கிவிட்டார்.

அப்போது இந்த டாப்பிக்கிற்குள் எண்ட்ரி கொடுத்த அசிம், தான் ஜனனியை மட்டும் சொல்லவில்லை, .. மைனாவையும்தான் சொன்னதாக கூறினார். ஆயினும் ஜனனி அப்போது ஜெயித்தபோது அசிமிடம் நன்றி சொல்ல வந்தபோது, அந்த கிரெடிட்டை பெருந்தன்மையாக எடுத்துக்கொள்ளவே செய்தார்.

HMs talks about Janany even after her elimination bigg boss 6

 அதே சமயம், ஜனனியோட வீட்ல இருந்து வரும் வரையில் அவளை இருக்க வைக்க முயற்சி செய்ததாக அசிம் ஏற்கனவே சொல்லியிருந்தார். ஆனால் இப்போது இப்படி பேசுவதால் அதிருப்தி ஆன தனா,  “மக்கள் எல்லாத்தையும் பாத்துட்டு இருக்காங்க” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

HMs talks about Janany even after her elimination bigg boss 6

இப்படி ஜனனி வெளியே போன பிறகும் அவர் குறித்த டாப்பிக் பிக்பாஸ் வீட்டில் பரவலாகவே நீடித்திருக்கிறது. இதனிடையே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர், கமல்ஹாசனுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஜனனி, "பிக்பாஸ் வீட்டில் நான் இருந்த போது என்னை ஏற்றுக் கொண்ட அனைவருக்கும் நன்றி. உங்களின் வாக்குகளால் என்னை அதிக அளவு ஊக்கப்படுத்தி உள்ளீர்கள். உங்களது எதிர்பார்ப்புகளை இத்தனை நாட்களில் என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்றால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். இனிமேல் உங்கள் அனைவரையும் என்னால் முடிந்த எல்லா வழிகளிலும் மகிழ்விப்பேன். மிக்க நன்றி" என ஜனனி குறிப்பிட்டுள்ளார்.

Also Read | ரீ ரிலீஸ் ஆகும் விஜய், ஜோதிகா நடித்த குஷி படத்தின் தெலுங்கு ரீமேக்.! SJ சூர்யா ட்வீட்

 

தொடர்புடைய இணைப்புகள்

HMs talks about Janany even after her elimination bigg boss 6

People looking for online information on Amuthavaanan, Amuthavanan, Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Janany elimination will find this news story useful.