www.garudabazaar.com

நம்பி டாஸ்கில் குதித்து ஜெயிக்கவும் செய்த அசிம்.. கடைசியில் பங்கம் பண்ணிய பிக்பாஸ்..! bigg boss 6 tamil

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

final twist afer azeem won bigg boss new task trending

Also Read | "என்னது? அமுதவாணனோட ஒரு நாளைய சம்பளம் இவ்ளோவா?".. பரபரப்பாகும் டிஸ்கஷன்! bigg boss

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, வைல்டு கார்டு எண்ட்ரியில் மைனா உள்ளிட்ட நபர்கள் பங்கேற்றனர்.

final twist afer azeem won bigg boss new task trending

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி, ராம், ஆயிஷா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.  கடைசிவாரத்தில் ஜனனி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

final twist afer azeem won bigg boss new task trending

இதனிடையே இந்த வாரத்திற்கான டாஸ்காக ஸ்கிராட்ச் கார்டு போட்டி அறிவிக்கப்பட்டது, அதன்படி ஒரு பிங் பாலை உருட்டி அது மூன்று பிட்ச்களுக்குப் பின்னர் அங்கிருக்கும் ஒரு குடுவையில் விழ வேண்டும். இது ஒரு மேட்டரா? என்பது போல் அசிம் முயற்சி செய்ய, மூன்று வாய்ப்புகளிலும் அசிம் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டார். அப்போது பிக்பாஸோ, “என்ன அசிம்.. இவ்ளோ ஈசியான ஆட்டத்துல போய் தோத்துட்டீங்களே” என்று பங்கம் செய்ய, பின்னர் மற்றவர்களும் தோல்வியை தழுவினர். இறுதியில் அசிமே வென்றதுதான் ட்விஸ்ட்.

அப்போது பிக்பாஸை அசிம் பார்க்க, அவரது பார்வைக்கு அர்த்தம் புரிந்துகொண்ட பிக்பாஸ், “வாழ்த்துக்கள் அசிம்” என கூறியவர்,   “ஆனாலும் அடுத்த ரெண்டு கேமை நீங்க ஆட முடியாம போச்சேனு நெனைக்கும்போதுதான்...” என்று ‘இக்’ வைத்து பேசி அதகளம் பண்ணினார். அமுதவாணனோ, “யோவ்.. அவருதான் கலாய்க்கறார்ல.. ஏன் திரும்ப  போய் வாய கொடுத்து வாங்கிக்குற?” என்று கிண்டலடித்தார்.

final twist afer azeem won bigg boss new task trending

பின்னர் வெற்றிபெற்ற உற்சாகத்தில் ஸ்கிராட்ச் கார்டை பிரித்து பார்த்த அசிமுக்கு அதைவிட ஒரு ‘வல்லிய’ சன்மானம் காத்திருந்தது. ஆம்,  பிக்பாஸ் பஸ்ஸர் அடிக்கும் போதெல்லாம் அசிம் நீச்சல் குளத்தில் குதிக்க வேண்டும். “என்னயா வாய்ல ஸ்வீட் வெச்சு வெடிய அடியில வெச்சுட்டீங்களே” என்பதுபோல், பிக்பாஸ் பஸ்ஸர் அடிக்க, அசிம் குதிப்பதற்குள், ஹவுஸ்மேட்ஸ் சேர்ந்து அவரை நீச்சல் குளத்தில் தள்ளிவிட்டனர். பிக்பாஸ்க்கும் அசிமுக்குமான இந்த க்யூட்டான விளையாட்டை அசிமே ரசித்து என்ஜாய் பண்ணினாலும்,  “அவனுக்கு ஜலதோஷம் பிடிச்சிரும்” என ஆதங்கப் பட்டுக்கொண்டிருந்தார் ஏடிகே. நண்பேண்டா!

Also Read | எலிமினேஷன்க்கு பிறகும் பிக்பாஸ் வீட்டில் தீயாய் பறந்த ஜனனி டாப்பிக்.. இப்ப என்ன? bigg boss 6 tamil

தொடர்புடைய இணைப்புகள்

final twist afer azeem won bigg boss new task trending

People looking for online information on Amuthavaanan, Amuthavanan, Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Janany elimination will find this news story useful.