www.garudabazaar.com

"கேஸை மைனா கிட்ட கொடு".. அசீமுக்கு ஐடியா கொடுத்த அமுதவாணன்.. ஷாக் ஆன மைனா..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

BiggBoss 6 Tamil Azeem asks myna to be his lawyer in court task

Also Read | அமிதாப் பச்சனை நேரில் காண சிறுவன் செஞ்ச காரியம்.. பிறகு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

BiggBoss 6 Tamil Azeem asks myna to be his lawyer in court task

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து, கடந்த வார இறுதியில் நிவாஷினி வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டினுள் கோர்ட் டாஸ்க் துவங்கி இருக்கிறது. இதன்படி, பிக்பாஸ் வீடு இந்த வாரம் நீதிமன்றமாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் நீதிமன்றம் என்ற பெயரில் இந்த டாஸ்க் ஆரம்பமாகும் நிலையில், ஒவ்வொருவராக தங்களது வழக்கு என்ன என்பதை மெயின் டோர் கேமரா முன்பு பதிவு செய்யலாம். இதன் பின்னர் குற்றம் சாட்டப்பட்ட நபருக்காக வழக்கறிஞரை தேர்வு செய்து அவரது வழக்கை தயார் செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

BiggBoss 6 Tamil Azeem asks myna to be his lawyer in court task

முன்னதாக, பிக்பாஸ் வீட்டினுள் அரண்மனை டாஸ்க் நடைபெற்றது. அப்போது, அசீம் - ADK இடையே வாக்குவாதம் நடந்தது. இதுகுறித்து கமல் ஹாசனும் ன் நிகழ்ச்சியில் பேசியிருந்தார். இந்நிலையில், இதுகுறித்து அசீம் மீது வழக்கு போடுவதாக ADK கேமரா முன்னர் சொல்லியிருக்கிறார். அரண்மனை டாஸ்க்கில் நடைபெற்ற சாவி திருட்டு சம்பவம் தொடர்பாக அசீம் மீது தான் வழக்கு போடுவதாக ADK குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், தன்மீது போடப்பட்டுள்ள வழக்கை தான் ஏற்பதாகவும், இதுகுறித்த கோர்ட் விசாரணைக்கு ஒத்துழைக்க இருப்பதாகவும் அசீம் தெரிவித்திருக்கிறார்.

இதன் பின்னர், கார்டன் பகுதிக்கு நடந்து செல்லும் போது அசீமிடம் கேஸை மைனாகிட்ட கொடுக்கும்படி சொல்கிறார் அமுதவாணன். பின்னர், அங்கே இருந்த மைனா நந்தினியை அழைக்கிறார் அசீம். 'யாரும் டிஸ்கஷன் பண்ணகூடாது-ன்னு சொல்லிருக்காங்க' என கூறியபடியே மைனா அருகில் வருகிறார். அப்போது அசீம், "கேஸ் பத்திதான் பேசக்கூடாது. அட்வகேட் கிட்ட எப்படி பேசுறது?" என்கிறார்.

BiggBoss 6 Tamil Azeem asks myna to be his lawyer in court task

உடனே மைனா,"ஓ நீ அட்வகேட்-ஆ" என கேட்க, தனக்கு அட்வகேட்-ஆக இருக்கும்படி மைனாவிடம் சொல்கிறார் அசீம். இதனைக்கேட்டு அதிர்ந்துபோன மைனா, சிரித்தபடியே 'நான் வரல' என்கிறார். அப்போது அவரை அசீம் சமாதானப்படுத்த முயல்கிறார்.

Also Read | சூடுபிடிக்கும் பிக்பாஸ் கோர்ட் டாஸ்க்.. அசீம் மீது கேஸ் போட்ட ADK.. இதுதான் காரணமாம்..!

தொடர்புடைய இணைப்புகள்

BiggBoss 6 Tamil Azeem asks myna to be his lawyer in court task

People looking for online information on Amudhavanan, Azeem, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Myna Nandhini, Vijay Television, Vijay tv will find this news story useful.