www.garudabazaar.com

"எனக்கு ஒரு M**ம் தேவயில்ல" - வனிதா ஆவேசம்.. இன்னுமா முடியல இந்த காபி பொடி பிரச்சன.. BBUltimate Tamil

முகப்பு > சினிமா செய்திகள்

By |

BiggBoss Ultimate Tamil 04, பிப்ரவரி 2022 :- டிஸ்னி+ஹாட் ஸ்டார் ஓடிடியில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி.

i dont want any M Vanitha Bigg Boss Ultimate Tamil வனிதா

BiggBoss OTT

இந்த நிகழ்ச்சியின் முதல் நாள் எபிசோடு விஜய் டிவியிலும் நேரடியாக ஒளிபரப்பானது. இதில் போட்டியாளர்களாக வனிதா, தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத், சுஜா வருணி, ஷாரிக் ஹசன், சினேகன், சுருதி, அபினய் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

காபி பிரச்சன..

i dont want any M Vanitha Bigg Boss Ultimate Tamil வனிதா

இந்த நிகழ்ச்சியில் முன்னதாக செலிபிரிட்டி பிரஸ் மீட் டாஸ்க் அரங்கேறியது. இந்த டாஸ்க்கை அடுத்து வனிதா, தனது டீம் ஜெயித்து கைப்பற்றியதாக கூறி காபி பொடி டப்பாவை தன் இருப்பிடத்தில் வைத்துக் கொள்ள முயற்சித்தார். ஆனால், அதை தடுத்த அபிராமி, தாங்களும் விளையாடியதால் தான் அந்த காபி பொடி கிடைத்ததாக கூறி வாதம் பண்ணினார்.

அழுத வனிதா அக்கா..

i dont want any M Vanitha Bigg Boss Ultimate Tamil வனிதா

பின்னர் காபி பொடியை தூக்கிப் போட்டு விட்டு தனக்கு வேண்டாம் என சொல்லி வனிதா கோபமாக சென்றுவிட்டார். அதன் பின்னர் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து வனிதா, அழக்கூடிய ஆடியோவையும் டிஸ்னி+ஹாட் ஸ்டாரில் வெளியிட்டனர். இப்படி கோபமாக இருந்த வனிதாவிடம் சுரேஷ் சக்ரவர்த்தி சென்று சதானப்படுத்தினார். 

எனக்கு ஒரு M**ம் தேவயில்ல

i dont want any M Vanitha Bigg Boss Ultimate Tamil வனிதா

ஆம், சுரேஷ் தாத்தா வனிதாவிடம் சென்று, ‘இங்க பாரு.. என் பங்கை நான் தரேன்.. நீ எடுத்துக்கொள்’ என சொல்லி சுரேஷ் சக்ரவர்த்தி தாத்தா, வனிதாவை சமாதானப் படுத்த முயற்சித்தபோது , அவரிடம் ஆவேசமாக பேசிய வனிதா,  “எனக்கு ஒரு M**ம் தேவயில்ல” என்று காட்டமாகக் கூறிவிட்டார். பின்னர் திரும்பி நடந்து போன வனிதா, “உங்கள சொல்லல அண்ணா” என சுரேஷ் சக்ரவர்த்தியிடம் மீண்டும் கூறினர்.

வனிதா ஹர்ட் ஆகிட்டாங்க..

i dont want any M Vanitha Bigg Boss Ultimate Tamil வனிதா

அதன் பின்னர் இது குறித்து தனிமையில் அமர்ந்து பேசிய ஜூலி வனிதா ஹர்ட் ஆகிவிட்டதாக சொல்ல, அதற்கு அனிதாவும், “ஆமாம். வனிதா அக்கா அவ்வளவு சீக்கிரம் அழற ஆள் கிடையாது. அவங்க ரொம்ப ஸ்ட்ராங்க், ஆனா அவங்க இப்படி அப்செட் ஆகியிருக்காங்க” என சொல்லி வனிதாவுக்காக ஆதங்கப்பட்டு பேசிக் கொண்டிருந்தனர்.

இரவு 9 மணிக்கு..

i dont want any M Vanitha Bigg Boss Ultimate Tamil வனிதா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முன்பை போல் அல்லாமல் இந்த ஓடிடி நிகழ்ச்சி, எந்தவித சென்சார் கட் மற்றும் பெரிய அளவிலான காட்சிகள் கட் பண்ணப்படுவது உள்ளிட்ட விஷயங்கள் இல்லாமல் நடக்கிறது. பெரும்பாலும் ஒரு நாள் முழுவதும் நடக்கக் கூடிய விஷயங்களை 24 மணி நேரமும் நேரலையில் காட்டப்பட்டு வருகிறது. அதே போல் இந்த நிகழ்ச்சியின் 24 மணிநேரமும் நேரலை காட்சி ஓடிக் கொண்டிருப்பது போல, மொத்த நிகழ்ச்சியும் ஒரு மணி நேரமாக இரவு 9 மணிக்கு டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தினமும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: பிரச்சனையே இல்லனு பிரச்சனை ஆக்குறீங்களா பிக்பாஸ்? - அழுது கொந்தளித்த வனிதா.. வெளியான பரபரப்பு ஆடியோ ..

தொடர்புடைய இணைப்புகள்

i dont want any M Vanitha Bigg Boss Ultimate Tamil வனிதா

People looking for online information on Bigg Boss OTT, Bigg Boss Ultimate, Bigg Boss Ultimate Tamil, BiggBossUltimate Tamil, Vanitha Akka, Vanitha Bigg Boss Tamil, Vanitha Bigg Boss Ultimate Tamil, Vanitha Vijayakumar will find this news story useful.