பிரபல காமெடி நடிகர் கிருஷ்ணமூர்த்தி மரணம்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 07, 2019 10:24 AM
தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் தனது இயல்பான நடிப்பை வழங்கி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. மேலும், நான் கடவுள் மற்றும் நான் ஆகிய படங்களில் யதார்த்தமான நடிப்பால் தனது வேடத்திற்கு நியாயம் செய்திருப்பார்.

குறிப்பாக இவர் 'தவசி' படத்தில் வடிவேலுவிடம் மனநலம் பாதிக்கப்பட்டவராக ஒசாமா பின்லேடனின் அட்ரஸ் கேட்கும் இவரது நடிப்பை யாராலும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க முடியாது.
இவர் தற்போது சக்தி சிதம்பரம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு குமுளி அருகே நடைபெற்றுவந்தது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது, நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பு ஏற்பட்டு, அதிகாலை 4.30 மணிக்கு உயிரிழந்துள்ளார். அவரது மறைவிற்கு திரையுலகினர் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
Tags : Krishnamurthy, Comedy, Sakthi Chithambaram