Kaateri logo top
www.garudabazaar.com

Mr & Mrs சின்னத்திரை சீசன் 4 : எலிமினேஷன் சுற்றில் முதல் முதலாக விலகிய ஜோடி யார்??..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஏராளமான ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், சமீபத்தில் ஆரம்பமாகி ஒளிபரப்பாகி வரும் Mr & Mrs. சின்னத்திரை நிகழ்ச்சியின் நான்காவது சீசனும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று, சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது.

mr and mrs chinnathirai season 4 first eviction pair

இந்த Mr & Mrs. சின்னத்திரை நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகர், நடிகைகள் அல்லது மக்கள் மத்தியில் அதிக பிரபலமான நபர்கள், தங்கள் மனைவி அல்லது கணவருடன் இந்த நிகழ்ச்சியில் ஜோடியாக கலந்து கொள்ள வேண்டும்.

தம்பதியருக்கு இடையே உள்ள அன்பை வெளிப்படுத்தவும், இந்த நிகழ்ச்சியில் ஏராளமான போட்டிகள் நிகழ்த்தப்பட்டு வருகிறது.

முன்னதாக, Mr & Mrs. சின்னத்திரை நிகழ்ச்சியில், இதுவரை மூன்று சீசன்கள் முடிவடைந்திருந்த நிலையில், அனைத்துமே மக்கள் மத்தியில் சிறந்த பெயரை எடுத்திருந்ததால், தற்போது இதன் நான்காவது சீசனும் ஆரம்பமாகி, வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இதன் மூன்றாவது சீசனில், நீயா நானா கோபிநாத் மற்றும் தேவதர்ஷினி ஆகியோர் நடுவர்களாக கலந்து கொண்டிருந்தார்கள். இதில், சரத் - கிருத்திகா ஜோடி, டைட்டில் வின்னர் பட்டத்தையும் தட்டிச் சென்றிருந்தது.

தொடர்ந்து, தற்போது நடைபெற்று வரும் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரையின் நான்காவது சீசனை மாகாபா ஆனந்த் மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகியோர் தொகுத்து வழங்க, மொத்தம் 10 ஜோடிகள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளார்கள். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் எலிமினேஷன் சுற்று, சமீபத்தில் நடைபெற்றது.

mr and mrs chinnathirai season 4 first eviction pair

நான்காவது சீசனின் முதல் எலிமினேஷன் சுற்றில், அஜய் கிருஷ்ணா - ஜெஸ்ஸி ஜோடி பங்கேற்காத காரணத்தினால், அவர்களே போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக கூறி உள்ளார்கள். இது தொடர்பான பதிவுகளை நெட்டிசன்கள் பலரும் தற்போது பகிர்ந்து வருகின்றனர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம், மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் அஜய் கிருஷ்ணா.

mr and mrs chinnathirai season 4 first eviction pair

பாடகர் உதித் நாராயணன் குரலில் பாடி அசத்தும் அஜய், ஜெஸ்ஸியை கடந்த மே மாதம் திருமணம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

mr and mrs chinnathirai season 4 first eviction pair

People looking for online information on Ajay Krishna, Mr and Mrs. Chinnathirai, Season 4 will find this news story useful.