www.garudabazaar.com

SUPER SINGER அஜய் - ஜெஸ்ஸி ஜோடி LOVE-ல இவ்ளோ பிரச்சனையா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களின் பேராதரவை பெற்றவர் அஜய் கிருஷ்ணா. இவர் பிரபல பாடகர் உதித் நாராயணன் போல்  அவரது குரலில் அப்படியே பாடி பலமுறை பாடகர்களையும் வியக்க வைத்திருக்கிறார். எஸ்.பி.பி. பாலசுப்பிரமணியன் முன்பு அவர் பாடிய

Super Singer Ajay Krishna Jessy Humorous Interview About Love

பாடலை உதித் நாராயணன் போல் பாடி அசத்தி காட்டி கைதட்டல் வாங்கினார். இவரை விஜய் டிவி உதித் நாராயணன் என்றே அழைக்கப்படுகிறார். இந்நிலையில், அஜய் கிருஷ்ணாவுக்கு ஜெஸ்ஸி என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியானது.  இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பலரும் அஜய் கிருஷ்ணாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். தற்போது, தங்களது காதல் அனுபவங்கள் குறித்து அஜய் கிருஷ்ணா - ஜெஸ்ஸி பகிர்ந்துள்ளனர்.

அஜய் - ஜெஸ்ஸி நிச்சயதார்த்தம்

ஏன் இந்த திடீர் நிச்சயதார்த்தம் என்பது குறித்து ஜெஸ்ஸி கூறியதாவது, "நிச்சயதார்த்தம் திடீர் முடிவாகும் என்று எதிர்பார்க்கவில்லை.  யாருக்கும் சொல்ல முடியாத சூழல் அமைந்துவிட்டது. கோவிட் பிரச்னை வேற ஒருபக்கம், அதனால் குறிப்பிட்ட தெரிந்த நபர்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்து நிச்சயதார்த்தத்தை முடிச்சோம். வீட்டுக்கு பக்கத்தில் இருக்குற பார்ட்டி ஹாலில் தான் நிச்சயதார்த்த விழாவை  ரொம்ப சிம்பிளா நடத்தினோம் " என்று கூறினார்.

காதல் பிரச்னை

மேலும், வீட்டில் பெற்றோர் எவ்வாறு காதலை ஏற்றுக்கொண்டனர், எப்படி சமாளித்தோம் என்பது பற்றி அஜய் கூறியதாவது, "இது ரொம்ப பெரிய பிரச்னைங்க, காதல்னாலே பிரச்னைதான். ஆனால் பெற்றோர் சம்மதிக்க மாட்டாங்க. ஜெஸ்ஸிக்கு என்னனா இந்த பிரச்னையை உடனே சரி பண்ணிடனும். அவங்க வீட்டுல பொண்ணு பார்க்க, சாரி.. ஆமா பையன்ல.. மாப்ள பாக்க ஆரம்பிச்சுட்டாங்க என்று கலகலப்பை ஏற்படுத்தினார் அஜய் கிருஷ்ணா. மீண்டும் ஜெஸ்ஸியை பற்றி கூற ஆரம்பித்த அஜய், "இவங்க வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சாட்டாங்க. என்னிடம் எப்போ பேசுனாலும், வீட்டுல எப்ப சொல்ல போற, சீக்கிரம் சொல்லு என்ன சொல்லிட்டியா என்றே கேட்பாங்க. நான் பார்க்கதான் தைரியமானவன் மாதிரி தெரியும். ரொம்ப பயந்தாங்கோழி, வீட்டுல பேச பயந்தேன்" என்று கூறினார்.

பெற்றோர் சம்மதம்

காதலிப்பதை விட பெற்றோர் சம்மதம் ரொம்ப ரொம்ப முக்கியம், அவங்க இல்லாம திருமணம் நடப்பதும் கடினம். அஜய் - ஜெஸ்ஸி இருவரும் பெற்றோரை எப்படி சம்மதிக்கை வைத்தார்கள் என்பது ஜெஸ்ஸி கூறியதாவது, "ஒரு கட்டத்துல எனக்கு ரொம்ப மாப்பிள்ளை தீவிரமா பார்க்க ஆரம்புச்சுட்டாங்க. எனக்கு என்ன பன்றதுனு தெரியலை. திடீர்னு ஒரு நாள் அப்பா வந்து, என்கிட்ட மாப்பிள்ளை கிட்ட போன்ல பேசு என்ற சொன்னார்.

நான் உடனே அஜய் கிருஷ்ணாவை லவ் பன்றேன், கல்யாணம் பண்ணா அவரைத்தான் பண்ணிக்குவேன் என்றதும் எல்லாரும் ரொம்ப ஷாக் ஆகிட்டாங்க. ஒரு நாளைக்கு ஒருத்தர் என்கிட்ட விடாம பேசுவாங்க. எனக்கு புரியும் அவங்க எதுக்கு ட்ரை பன்றாங்கனு, ஆனால் நாங்க 2 பேரும் ரொம்ப ஸ்ட்ராங்கா இருந்தோம். அதனால் சரி கல்யாணம் பண்ணி வைச்சுடலாம்னு இருவர் வீட்டிலும் சம்மதம் தெரிவித்து நிச்சயதார்த்தம் நல்லபடியா நடந்து முடிந்தது" என்று கூறினார்.

அம்மாவை மிஸ் பன்றேன்

ஜெஸ்ஸிக்கு பிறகு தனக்கு பிடித்த பிரியமான அம்மாவை பற்றி அஜய் கூற ஆரம்பித்தார். அவர் சோகமான முகத்தோடு, "அம்மாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்.  எனக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது.  அம்மா என்னை அஜய் சொல்லி கூப்பிடமாட்டாங்க. யா.. யா எந்திரிப்பா என்று தான் கூப்பிடுவாங்க. இப்பவும் எனது அறையில அம்மா சிரிச்ச முகத்தோட இருக்கிற புகைப்படத்தை வைச்சிருக்கேன். என்னுடைய எல்லா பிரச்னையிலும் அம்மாவை பார்த்தா சரியாகிடும் என்கிற நம்பிக்கை. நா நிகழ்ச்சிக்கு அல்லது பாட போறதா இருந்தாலும், அம்மா ஆசிர்வாதம் இல்லாம நடக்காது" என்றார்.

காதல் பாட்டு

நிச்சயதார்த்த விழாவில் ஜெஸ்ஸியை பார்த்து மெட்ராஸ் படத்தில் இடம்பிடித்த ஆகாயம் தீப்பிடிச்சா காதல் பாட்டை பாடி அசத்தினார். தற்போது மீண்டும் ஒரு முறை,  "ஆகாயம் தீப்பிடிச்சா நிலா தூங்குமா.. நீ இல்லா நேரம் எல்லாம் நெஞ்சம் தாங்குமா" என்ற   பாடலை பாடி காண்பித்து ஜெஸ்ஸியை சிரிக்க வைத்தார் அஜய். அப்பேது ஜெஸ்ஸி மிகவும் மகிழ்ச்சி கலந்த வார்த்தையில், "ஆகாயம் தீப்பிடிச்சா பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும். நிச்சயதார்த்தம் அன்னைக்கு பாடுனதும் ரொம்ப எமஷோனல ஆகிட்டேன்" என்று கூறினார்.

SUPER SINGER அஜய் - ஜெஸ்ஸி ஜோடி LOVE-ல இவ்ளோ பிரச்சனையா? வீடியோ

Super Singer Ajay Krishna Jessy Humorous Interview About Love

People looking for online information on Ajay krishna Jessy love, Love Couple, Love Married, Parents, Super Singer Ajay krishna will find this news story useful.