www.garudabazaar.com

கண்ணியம் தவறிட்டாரு.. கமல் முன் அசீம்க்கு Red Card கொடுத்த ஹவுஸ்மேட்ஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Most of the Housemates gave Red Card to Azeem in BB6

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

பிக்பாஸ் வீட்டை பொருத்தவரை தற்போது சண்டை , சச்சரவுகள் , கலவரங்கள், களேபரங்கள் அனைத்துமே சூடுபிடித்து இருக்கின்றன. குறிப்பாக அசீம் - விக்ரமன் மோதல், தனலட்சுமி - அசல் கோலார் மோதல், ஆயிஷா - அசீம் மோதல் என பலவிதமான மோதல்கள் உருவெடுத்தன. இதனிடையே, வார இறுதி எபிசோடில் போட்டியாளர்கள் முன்பு கமல் தோன்றி இருந்தார்.

அப்போது பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் நடந்த பல விஷயங்கள் தொடர்பாக போட்டியாளர்களிடம் பேசி இருந்தார் கமல். அந்த சமயத்தில், போட்டியாளர்கள் அனைவரிடமும் "யாருக்கு Red Card கொடுப்பீங்க? " என்ற கேள்வியையும் கமல் முன் வைத்திருந்தார். இதற்கு பெரும்பாலான போட்டியாளர்கள் அசீமை தான் கைகாட்டி இருந்தனர்.

மேலும், அசீமுக்கு Red Card கொடுத்த போட்டியாளர்கள் அனைவரும், அசீம் பேசிய விதம் சரியில்லை, கண்ணியம் தவறி விட்டார் என்றும், ஆயிஷாவை வாடி போடி என சொல்லி விட்டார் என்றும் அவருக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றும் தெரிவித்தனர். அதே போல, கோபமாக கத்தும் அசீம், எல்லாரிடமும் சண்டையிட்டு பிரச்சனை செய்தார் என இப்படி பல காரணங்களையும் அசீமுக்கு Red Card கொடுத்ததற்காக பிக்பாஸ் போட்டியாளர்கள் கமலிடம் குறிப்பிட்டிருந்தனர்.

Most of the Housemates gave Red Card to Azeem in BB6

People looking for online information on BiggBoss6 Tamil, Red Card will find this news story useful.