www.garudabazaar.com

வீட்டை மாத்தி பாக்யலட்சுமியை மீண்டும் சீண்டிய கோபி.. இனி தான் கச்சேரியே இருக்கு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாக்கியலட்சுமி' தொடர், ஒவ்வொரு எபிசோடிலும் பல பரபரப்பான திருப்பங்களுடன் தற்போது சென்று கொண்டிருக்கிறது.

Gobi Changed his house in Baakiyalakhmi serial

மனைவி பாக்கியாவை விவாகரத்து செய்ய அனைத்து வழிகளிலும் திட்டம் போட்டு வந்த கோபி, கடைசியில் அதனை நிறைவேற்றவும் செய்து விட்டார். முன்னதாக, மனைவி பாக்கியலட்சுமியையும், ராதிகாவையும் பலே ஆளாக நாடகம் போட்டு நீண்ட காலம் அவர் ஏமாற்றியும் வந்தார்.

இதன் பின்னர், சமீபத்தில் ராதிகாவை திருமணம் செய்து கொண்ட சமயத்தில், பல்வேறு விறுவிறுப்பான நிகழ்வுகளும் கூட பிக்பாஸ் தொடரில் அரங்கேறி இருந்தது. இப்படி ஒரு சூழ்நிலையில், தற்போது பாக்கியலட்சுமி தொடர் பெரும் விறுவிறுப்புடன் சென்றுகொண்டிருக்கிறது.

கோபியின் இரண்டாம் திருமணத்திற்கு பிறகு பாக்கியலட்சுமி, தன்னுடைய மகன்கள், மகள், மருமகள், மாமியார், மாமனாருடன் அதே குடும்பத்தில் வசித்து வருகிறார். ஆனால் கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகாவுடன் இணைந்து வாழ்ந்து வருகிறார். பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என இரண்டு சீரியல்களின் மெகா சங்கமம் சமீபத்தில் நடந்தது. இதில் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் கொடைக்கானலுக்கு வந்திருந்தனர். மறுபக்கம், தனது இரண்டாவது மனைவி ராதிகாவுடன் கொடைக்கானலுக்கு தேனிலவுக்காகவும் சென்றிருந்தார் கோபி. ஏகப்பட்ட பஞ்சாயத்துகளுக்கு அப்புறம் வீடு திரும்பியுள்ளது இரு குடும்பங்களும்.

இந்நிலையில், பாக்கியலக்ஷ்மி இருக்கும் வீட்டுக்கு எதிர்புறத்தில் உள்ள வீட்டுக்கு குடியேறுகிறார் கோபி. எதிரே இருக்கும் வக்கீல் வீட்டுக்கு ஒருவர் புதிதாக குடிவர இருப்பதாக பாக்கியலக்ஷ்மியிடம் ஒருவர் சொல்ல கோபி தனது இரண்டாவது மனைவியுடன் அவர் முன்பு காரில் வந்து இறங்குகிறார்.

ராதிகாவை கையை பிடித்து கீழே இறக்கிவிடும் கோபி, ராதிகாவின் மகளிடம்,"நம்ம வீடு இதுதான். இனி இந்த ஏரியால தான் இருக்க போறோம்" எனக் கூறுகிறார். இதனால், வாசலில் நின்றிருந்த பாக்கியலட்சுமி கோபத்துடன் அவர்களை பார்த்தபடி நிற்கிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Gobi Changed his house in Baakiyalakhmi serial

People looking for online information on Baakiyalakshmi, Serial, Today episode, Vijay tv will find this news story useful.