www.garudabazaar.com

Bigg boss 6 Tamil: நிம்மதியா பேச விடுறாங்களா.. திடீர்னு வந்த சத்தம்.. அரண்ட GP முத்து..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Biggboss6 Tamil GP Muthu shocked heavily after a dog barking sound

Also Read | BiggBoss6 Tamil: "எது பூன வாலா?".. GP முத்துவை படபடக்க வைத்த போட்டியாளர்கள்..

இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

பிக்பாஸ் வீட்டுக்குள் ஆயிஷாவுடன் பேசிக்கொண்டிருந்த GP முத்து, நாய் குறைக்கும் சத்தத்தை கேட்டு அப்படியே அதிர்ந்துபோகிறார். மேலும், தனக்கு நாய்கள் என்றால் எப்போதுமே பயம் என தனக்கென உரித்தான பாணியில் சொல்கிறார்.

Biggboss6 Tamil GP Muthu shocked heavily after a dog barking sound

இந்நிலையில், தற்போது பிக்பாஸ் ஆறாவது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.

இந்த சீசனில் யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Biggboss6 Tamil GP Muthu shocked heavily after a dog barking sound

பிக்பாஸ் வீட்டுக்குள் ஜாலியாக வலம்வரும் GP முத்து, தன்னுடைய வெள்ளேந்தியான குணத்தால் சக போட்டியாளர்களிடம் ஈர்க்கப்பட்டுள்ளார் என்றே சொல்லவேண்டும். முன்னதாக வீட்டுக்குள் உள்ள கேமராவில் தான் மகிழ்ச்சியாக இருப்பதாக தனது குடும்பத்தினரிடம் கூறியிருந்தார். இந்நிலையில், வீட்டினுள் ஆயிஷாவிடம் பேசிக்கொண்டிருக்கிறார் GP முத்து. தரையில் அமர்ந்தவாறு போட்டியாளர்களிடம் அவர் பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென நாய் குரைக்கும் சத்தம் பலமாக கேட்கிறது.

Biggboss6 Tamil GP Muthu shocked heavily after a dog barking sound

அப்போது, தரையில் அமர்ந்திருந்த முத்து, பதறியபடி சில அடிகள் நகர்ந்து போகிறார். நெஞ்சில் கைவைத்தபடி,"எனக்கு நாயினாலே பயம்" எனக் கூறுகிறார் GP முத்து. அப்போது போட்டியாளர் ஒருவர் நாய்க்கு பிஸ்கட் போடலைன்னு இப்படி கத்துது எனக் கூற, அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் அப்படியே அமர்ந்திருக்கிறார் GP முத்து.

 

Also Read | ரவீனா தாஹா வாங்கிய விலையுயர்ந்த சொகுசு கார்.. விலை மட்டும் இம்புட்டா? அப்படி என்ன ஸ்பெஷல்!

தொடர்புடைய இணைப்புகள்

Biggboss6 Tamil GP Muthu shocked heavily after a dog barking sound

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil 6, Biggboss 6 housemates, Dog barking sound, GP MUTHU will find this news story useful.