தடுக்க வேண்டிய 'வந்தேரிகளை' ஊருக்குள் விட்டுவிட்டோம்... யாரை சொல்கிறார் இயக்குனர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகையே உழுக்கி வரும் கொரரோனா வைரஸால்  பல லட்சம் பேர் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனா பற்றி டிவீட் செய்த நவீன்|Moodar Koodam Naveen corona tweet

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 700ஐ தாண்டிவிட்டது. மேலும் வைரஸ் மிக தீவிரமாக பரவுவதை தடுக்க இந்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனைத் தொடர்நது மூடர் கூடம் இயக்குனர் நவீன் தனது டிவிட்டர் பக்கத்தில்“ விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தியிருக்க வேண்டிய வந்தேரி வைரஸ் இன்று பஸ் ஏறி ஊர் ஊராக சென்று கொண்டிருக்கிறது. வந்தேரிகளை விரட்ட வேண்டும் எனும் கொள்கையை இந்த ஒரு விடயத்தில் மட்டும் ஏற்க்கிறேன். நாம் வெளியே வராமல் வீட்டிற்குள்ளிருந்து நடத்தும் போர் இது” என தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor