கடந்த ஜனவரி மாதம் வெளியான நாடோடிகள் படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார் அஞ்சலி. அதன் பிறகு அனுஷ்கா நடிக்கும் நிசப்தம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் சில தெலுங்கு படங்களிலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

கொரோனா காரணமாக சினிமா படங்களின் ஷூட்டிங் அனைத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் நடிகர்கள் நடிகைகள் அனைவரும் தங்கள் வீடுகளிலேயே இருக்கின்றனர். தாங்கள் வீடுகளில் என்ன செய்து டைம் பாஸ் செய்து வருகின்றனர் என்பது பற்றி தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் புகைப்படம் வெளியிட்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து நடிகை அஞ்சலியும் தனது இன்ஸ்டா பக்கத்தில் “புது நபர் எங்கள் குடும்பத்தில் இணைந்திருக்கிறார்” என நாய்க்குட்டியின் புகைப்படத்தை வெளியிட்டு பதிவிட்டுள்ளார்.