வருமான வரித்துறை சோதனை... சினிமா ஃபைனான்சியர் அன்புசெழியன் வீட்டில் பணம் பறிமுதல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தயாரிப்பாளர் அன்புசெழியனிடன் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

money seized from financier anbuchezhian in IT Raids

கோபுரம் ஃபிலிம்ஸின் உரிமையாளர் மதுரை அன்புசெழியன். வெள்ளைக்கார துரை, தங்கமகன், மருது உள்ளிட்ட திரைப்படங்களை இவர் தயாரித்தார். மேலும் மற்ற நிறுவனங்களின் படங்களுக்கும் இவர் ஃபைனான்ஸ் செய்துள்ளார். இந்நிலையில் அன்புசெழியனிடம் வருமான வரித்துறையினர் நேற்று ரெய்டு நடத்தினர். மதுரையில் இருக்கும் அவரது வீட்டிலும், சென்னையில் இருக்கும் வீடு மற்றும் ஆபிசிலும் சோதனை நடந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் அன்புசெழியனிடம் இருந்து வருமான வரித்துறையினர் பணத்தை பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு என்ன என்பது பற்றி இன்னும் தகவல் கூறப்படாமல் இருக்கிறது. இதற்கிடையில் நடிகர் விஜய்யின் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.

Photo Credits : ANI

Entertainment sub editor