இந்தியாவின் சங்க இதிகாசங்களில் ஒன்றான இராமாயணத்தை படமாக்கும் முயற்சியில் பாலிவுட்டின் சூப்பர்ஹிட் பட இயக்குநர்கள் இரண்டு பேர் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளருடன் கைக்கோர்த்துள்ளனர்.
பாலிவுட்டில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நடிப்பில் வெளியான ‘மாம்’ படத்தை இயக்கிய ரவி உத்யாவர் மற்றும் ஆமிர்கானின் ‘தங்கல்’ படத்தை இயக்கிய நித்தேஷ் திவாரியும் இணைந்து ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இராமாயணத்தை 3 பாகங்களாக திரைப்படமாக்கவுள்ளனர்.
இந்த படத்தை பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், மது மந்தேனா, நமித் மல்ஹோத்ரா ஆகியோருடன் இணைந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் படமாக்க திட்டமிட்டுள்ளனர். 3-டி தொழில்நுட்பத்தில் பான் இந்தியா திரைப்படமாக இப்படம் உருவாகும் என கூறப்படுகிறது. படக்குழு தரப்பில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், இதர தொழில்நுட்ப கலைஞர்கள் யாரும் இதுவரை முடிவு செய்யப்படவில்லை என்றும், பல்வேறு மொழி திரைப்பட நடிகர்களை 3 பாகமாக உருவாகவிருக்கும் இந்த இராமாயணம் படத்தில் நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளாக் பஸ்டர் ஹிட் படங்களில் இயக்குநர்களான ரவி உத்யாவர் மற்றும் நித்தேஷ் திவாரி இணைந்திருக்கும் இந்த பிரம்மாண்ட இதிகாச திரைப்படத்தின் முதல் பாகம் வரும் 2012ம் ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படம் இந்திய திரையுலகில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.