டிஸ்னி தொலைக்காட்சிகளில் நடித்து பிரபலமான நடிகர் கேம்ரூன் பாய்ஸ்(20), மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தூக்கத்திலேயே உயிரிழந்த சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

டிஸ்னியின் மிகவும் பிரபலமான டிசென்டன்ட்ஸ், க்ரோன் அப்ஸ், க்ரோன் அப்ஸ் 2, ஜெஸ்ஸி போன்ற தொடர்களின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் கேம்ரூன் பாய்ஸ். இவருக்கு சமீபத்தில் மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தூக்கத்திலேயே உயிரிழந்ததாக அவரது குடும்பத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளின் மனம் கவர்ந்த நடிகரான கேம்ரூனின் மறைவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இளம் வயதிலேயே மறைந்த பாய்ஸுக்கு உலகம் முழுவதுமுள்ள அவரது ரசிகர்களும், அமெரிக்க திரைத்துறை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.