தல அஜித்குமாரின் மேனேஜராக இருப்பவர் சுரேஷ் சந்திரா. இவர் தமிழ் சினிமாவின் முன்னணி மக்கள் தொடர்பாளராகவும் திகழ்கிறார். இவர் தனது தாய்க்கு உடல் நிலை சரியில்லாமல் இருப்பது குறித்து உருக்கமாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
![Thala Ajith Visits his manager Suresh Chandra's Mom Thala Ajith Visits his manager Suresh Chandra's Mom](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/thala-ajith-visits-his-manager-suresh-chandras-mom-photos-pictures-stills.jpg)
இந்நிலையில் நடிகர் அஜித் சுரேஷ் சந்திராவின் அம்மாவை நலம் விசாரிப்பதற்காக சென்றிருக்கிறார். அங்கு அவர் சுமார் 4 நான்கு மணி நேரம் இருந்து அவரை நலம் விசாரித்துவிட்டு வந்திருக்கிறார்.
நடிகர் அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் 'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, போனி கபூர் இந்த படத்தை தயாரித்துவருகிறார்.
இந்த படத்தின் டப்பிங் பணிகளை அஜித் பேசி முடித்துள்ளதாக எங்களுக்கு தகவல்கள் கிடைத்தன. இந்த படத்தின் டிரெய்லர் இன்று ( 12.06.2019 ) மாலை 6 மணிக்கு வெளியாகவிருக்கிறது.
உடல் நலம் சரியில்லாத தன் மேனேஜரின் தாயை நேரில் சந்தித்த அஜித் வீடியோ