நாடக கதாசிரியரும், திரைப்பட வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் சமீபத்தில் மாரடைப்பால் காலமானார்.
கிரேஸி மோகனின் கடைசி நிமிடங்கள் குறித்து அவரது சகோதரர் மாது பாலாஜி Behindwoods-ன் மாத்தியோசி வித் அக்னி நிகழ்ச்சியில் பிரத்யேகமாக பகிர்ந்துக் கொண்டார்.
அவர் பேசுகையில், ‘உலகம் முழுவதும் இருந்து கிரேஸி மோகனின் மரணத்திற்கு ஏராளமான ரசிகர்கள் இரங்கல் தெரிவித்தது வியப்பாக இருந்தது. எனக்கு வாழ்க்கையில் எல்லாமே அவர் தான். பழம்பெரும் நாடக கலைஞர்களின் நுணுக்கங்களை கற்றுக் கொள்ள சொல்லி என்னிடம் வற்புறுத்துவார்’.
‘ஒரு மனிதனாக என்னை வடிவமைத்தவர் கிரேஸி மோகன். குழந்தைகளை கவரும் வித்தை மோகனிடம் இருந்தது. குழந்தைகள் மூலம் இளம் ரசிகர்களை கவருவது எங்களது நாடகத்தின் தனித்துவம். 6500 நாடகங்கள் இதுவரை அரங்கேற்றியிருக்கிறோம். எங்களது நாடக குழுவினர் அனைவரும் கடும் சோகத்தில் உள்ளனர்’.
‘அவரது மறைவு அன்று காலை இருவரும் பேசிக் கொண்டிருந்தோம், நெஞ்சில் லேசாக வலியிருப்பதாக கூறினார். டாக்டரிடம் செல்வோம் என்றுக் கூறிவிட்டு பயப்படாதே என்றேன். எனக்கு என்ன பயம்? ரமணர், மகா பெரியவர், விவேகானந்தர், பாரதியார் என எல்லோரும் அவங்க டியூட்டி முடிஞ்சதும் கிளம்பிட்டாங்க..என் டியூட்டி இன்னைக்கு முடிஞ்சிடும்னு இருந்தா போகப்போறேன் என்றார். கிரேஸி மோகன் மரணமடைந்த தகவலை முதன் முதலில் மருத்துவர் கமல்ஹாசனிடம் தான் தெரிவித்தார்’.
‘என் டியூட்டி இன்னைக்கு முடிஞ்சிடும்னு இருந்தா...’- கிரேஸி மோகனின் கடைசி வார்த்தைகள் வீடியோ