நீச்சல் குளத்தில் லூட்டி அடித்த காஜல்- வைரலாகும் ஸ்டில்ஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகை காஜல் அகர்வால் தனது குடும்பத்துடன் நீச்சல் குளத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Kajal Aggarwal shared pics with her nephew Ishaan and his mom Nisha in a swimming pool

தென்னிந்திய திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால், பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தற்போது நடிகை காஜல் அகர்வால், ஜெயம் ரவியின் 24வது படமான ‘கோமாளி’, ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள குயீன் பட தமிழ் ரீமேக்கான ‘பாரிஸ் பாரிஸ்’ ஆகிய படங்களின் வெளியீட்டிற்கு காத்திருக்கிறார். மேலும், ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், கொளுத்தும் கோடையை குளுமையாக்க தனது தங்கை நிஷா அகர்வால் மற்றும் அவரது குழந்தை இஷானுடன் இணைந்து நடிகை காஜல் அகர்வால் நீச்சல் குளத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் மேக்-அப் இல்லாத ஃபோட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய காஜல், தற்போது நீச்சல் குளத்தில் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#summervibes with @nishaaggarwal #ishaanvalecha 📸 @mastkarandar

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on