'ரோமியோ ஜூலியட்', 'போகன்' படங்களுக்கு பிறகு மீண்டும் ஜெயம் ரவி - லக்ஷமன் கூட்டணி இணைந்து ஒரு படத்தில் பணிபுரிய உள்ளனர். ஜெயம் ரவியின் 25 படமான இதனை ஹோம் மூவி மேககர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

டி.இமான் இசையமைக்கவுள்ள இந்த படத்தில் நிதி அகர்வால் ஹீரரோயினாக நடிக்கவுள்ளாராம். இந்நிலையில் இந்த படத்தில் 'சென்னை எக்ஸ்பிரஸ்', 'தில்வாலே' உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த டட்லி இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.
டட்லி தற்போது விஷால் - சுந்தர்.சி இணையும் படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த படத்தின் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.