'திரௌபதி’ மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிக்கும் புதிய படம்.. வெளியான மிரட்டலான Title Look!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திரௌபதி, ருத்ரதாண்டவம் உள்ளிட்ட படங்களை இயக்கிய மோகன் ஜி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் டைட்டில் லுக் வெளியாகியுள்ளது.

Mohan G Selvaraghavan New Movie Tittle look Poster Released

Also Read | சூரரைப்போற்று இந்தி ரீமேக்.. இதுதான் "மாறன்" கெட்-அப் ஆ? வேற லெவல் BTS போட்டோ..

தமிழின் முன்னணி இயக்குனரான செல்வராகவன் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணிக் காயிதம் படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார்.  அதற்கு முன்பாகவே அவர் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியாகியுள்ளது. நடிகராக பிஸியாக இருந்தாலும்  தனுஷுடன் நானே வருவேன் படத்தையும் செல்வராகவன் இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இந்துஜா மற்றும் ஸ்வடீஷ் நடிகையான எல்லி அவ்ரம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகின. சில நாட்களுக்கு முன்  அதிகாரப்பூர்வமாக இப் படத்துக்கு " பகாசூரன்" என்று பெயரிடப்பட்டுள்ளது.

Mohan G Selvaraghavan New Movie Tittle look Poster Released

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் மோகன்.G. அவர் அடுத்ததாக ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் இயக்குகிறார்.

இந்த  படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கிறார். நட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் பூஜை சிலநாட்களுக்கு முன் சேலம் அருகில் உள்ள முத்துமலை முருகன் கோவிலில் நடைபெற்றது. இன்று இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Mohan G Selvaraghavan New Movie Tittle look Poster Released

மகாபாரதம் பின்னணியில் டைட்டில் லுக் அமைந்துள்ளது. பகாசூரன் என்பது மகாபாரதத்தில் வரும் ஒரு அரக்கனின் கதாபாத்திரமாகும்

Also Read | மலையாளம் BIGGBOSS-ல் கமல் & மோகன்லால்.. குஷியான ரசிகர்கள்! வைரல் PHOTOS.!

தொடர்புடைய இணைப்புகள்

Mohan G Selvaraghavan New Movie Tittle look Poster Released

People looking for online information on Mohan, Selvaraghavan, Selvaraghavan New Movie updates will find this news story useful.