யானை டிரைலர் ‘அப்படி’ இருக்குமாம்… அருண் விஜய் பகிர்ந்த செம்ம அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அருண் விஜய் நடிக்கும் யானை படத்தின் டிரைலர் பற்றிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

Arun vijay yaanai movie trailer release update

ஹரி இயக்கத்தில் அருண் விஜய்…

நடிகர் அருண் விஜய்யின் சமீபத்தைய படங்களான தடையறத் தாக்க, மலை மலை மற்றும் தடம் ஆகிய படங்களின் வெற்றியின் மூலம் முன்னணி நடிகராகியுள்ளார். இந்நிலையில் முதல் முறையாக அவர் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிக்கும் யானை திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

படக்குழு…

நடிகர் அருண் விஜய், இயக்குநர் ஹரி கூட்டணியில்  “யானை” திரைப்படம் முழு படப்பிடிப்பு பணிகளும் முடிந்து, ரிலீஸூக்கு தயாராக உள்ளன.  இப்படத்திற்காக  இராமேஸ்வரம், தூத்துகுடி, காரைக்குடி, பழனி மற்றும் சென்னையில்  படப்பிடிப்பு நடந்து முடிந்தது. இந்த படத்தில் அருண்விஜய் உடன், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், கருடா ராம், புகழ், தலைவாசல்விஜய், இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி, ஐஸ்வர்யா, போஸ் வெங்கட், ஜெயபாலன் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். கிராமம் மற்றும் நகர பின்னணியில் தன் வழக்கமான பரபர திரைக்கதையுடன்  இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஹரி. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார்.

Arun vijay yaanai movie trailer release update

வெளியீட்டு உரிமைகள்…

யானை படத்தின் தமிழக தியேட்டர் ரிலீஸ் உரிமையை KKR சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.  இந்த யானை படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் OTT டிஜிட்டல் உரிமையை ஜி குரூப் கைப்பற்றி உள்ளது. ZEE5 OTT & ZEE தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் யானை திரைப்படம் சென்சாருக்கு தயாராகி வருவதாக அருண் விஜய் தெரிவித்திருந்தார்.

Arun vijay yaanai movie trailer release update

டிரைலர் அப்டேட்…

அதையடுத்து தற்போது படத்தின் டிரைலர் மே 30 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் டிரைலரைப் பற்றி குறிப்பிடுகையில் “Electrifying டிரைலர்” என்று குறிப்பிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்போடு புதிய போஸ்டர் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.

Arun vijay yaanai movie trailer release update

தொடர்புடைய இணைப்புகள்

Arun vijay yaanai movie trailer release update

People looking for online information on Arun Vijay, Hari, Priya bhavani sankar, Yaanai will find this news story useful.