மலையாளம் BIGGBOSS-ல் கமல் & மோகன்லால்.. குஷியான ரசிகர்கள்! வைரல் PHOTOS.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

"விக்ரம்" படத்தை, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

Kamal Haasan Meets Mohan Lal at Malayalam BIGGBOSS Show

Also Read | ஜி வி பிரகாஷ் & கௌதம் மேனன் நடிக்கும் புதிய படம்… title உடன் வெளியான மிரட்டல் first look

கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்திற்கு  ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ISC ஒளிப்பதிவு செய்கிறார்.விக்ரம் படத்தின் சண்டைக்காட்சியில் பாண்டம் (Phantom) கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாண்டம் கேமரா புரட்சிகரமான அதிவேக கேமரா ஆகும், இதில் FPS (வினாடிக்கு பிரேம்கள்) 1000 இலிருந்து தொடங்கி சராசரியாக 76000 FPS வரை படங்களை படம் பிடிக்க முடியும்.

Kamal Haasan Meets Mohan Lal at Malayalam BIGGBOSS Show

இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.

விக்ரம் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்திய படமாக ஜூன்-3 அன்று வெளியாகிறது.

இதனை முன்னிட்டு விக்ரம் படம், CBFC  உறுப்பினர்கள் மூலம் சென்சார் செய்யப்பட்டுள்ளது. இதனை படத்தயாரிப்பு நிறுவனம்,  கமல்ஹாசனின் புதிய போஸ்டர் மூலம் அறிவித்துள்ளனர். விக்ரம் படம் 173 நிமிடங்கள் (2 மணி நேரம் 53 நிமிடங்கள்) ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Kamal Haasan Meets Mohan Lal at Malayalam BIGGBOSS Show

தமிழகத்தில் முன்னணி விநியோக நிறுவனமான ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது.

விக்ரம் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. விக்ரம் படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு  உரிமத்தை பிரபல வினியோகஸ்தர்களான AP International நிறுவனம் மிகப்பெரிய சாதனை விலைக்கு வாங்கி உள்ளனர். மேலும் விக்ரம் படத்தின் ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா உரிமத்தை ஸ்ரேஷ்த்  மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

விக்ரம் படத்தின் தெலுங்கு பதிப்புக்கு "விக்ரம் ஹிட் லிஸ்ட்" என பெயரிடப்பட்டுள்ளது.

Kamal Haasan Meets Mohan Lal at Malayalam BIGGBOSS Show

இந்நிலையில் படத்தின் வெளியீட்டை ஒட்டி கமல்ஹாசன் பல நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார். குறிப்பாக கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சி, மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி, ஐதராபாத் முன் வெளியீட்டு விழா, கோலாலம்பூர் நிகழ்ச்சி, மும்பை முன் வெளியீட்டு விழா என பல நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் மோகன்லால் உடன் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகின்றன. 

தென்னிந்திய சினிமாவின் இரண்டு மாபெரும் கலைஞர்கள் ஒரே நிகழ்வில் பங்கேற்ற நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கடைசியாக உன்னைப் போல் ஒருவன் படத்தில் மோகன்லால் - கமல்ஹாசன் இணைந்து நடித்துள்ளனர்.

Kamal Haasan Meets Mohan Lal at Malayalam BIGGBOSS Show

மேலும் ஜூன் 1 ஆம் தேதி துபாயில் உள்ள உலகின் மிக பெரிய கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் விக்ரம் படத்தினை விளம்பரப்படுத்த உள்ளார்.

Also Read | சிக்ஸ் பேக்கா? இது எய்ட் பேக்.. ஜிம்மில் எடுத்த போட்டோவை வெளியிட்டு மாஸ் காட்டிய சூரி!

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan Meets Mohan Lal at Malayalam BIGGBOSS Show

People looking for online information on Kamal Haasan, Kamal Haasan Meets Mohan Lal, Malayalam BIGGBOSS Show, Mohan Lal will find this news story useful.