Veetla Vishesham Others Page USA

"Beast- ல நானும் விஜய்யும் மீட் பண்ற Scene… ஆனா" .. விருது விழாவில் செல்வராகவன் சொன்ன Secret

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் செல்வராகவன் சமீபத்தில் நடந்த Behindwoods Gold விருதுகள் விழாவில் கலந்துகொண்டார்.

Selvaraghavan secret about acting with vijay in beast

Also Read | ”நொடியில் வில்லன் ஆக்கப்பட்ட தேசபக்தர்…” ராக்கெட்ரி.. புது போஸ்டரை வெளியிட்ட மாதவன்.!

BGM 8

8 ஆவது Behindwoods Gold Medals விருது நிகழ்ச்சி கடந்த மே 21 மற்றும் 22 ஆகிய இரு தினங்களில், சென்னையின் தீவுத்தடலில் வைத்து மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது. இரண்டு நாட்களிலும் ஏராளமான பிரபலங்கள், Behindwoods விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். வெற்றிமாறன், செல்வராகவன், வெங்கட் பிரபு, எஸ் ஜே சூர்யா, விக்னேஷ் சிவன், நெல்சன், மணிகண்டன், யோகி பாபு, சதீஷ், சன்னி லியோன், லிஜோமோள் ஜோஸ், ஆண்ட்ரியா, ஞான வேல், லோகேஷ் கனகராஜ், ஜோனிதா காந்தி, அனிருத், யுவன் ஷங்கர் ராஜா, சாய் பல்லவி, பிரியங்கா மோகன், ரம்யா பாண்டியன் உள்ளிட்ட பல பிரபலங்கள், இரண்டு நாட்களிலும் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை சிறப்பித்திருந்தனர். இது சம்மந்தமான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

விருது வென்ற செல்வராகவன்…

இந்த நிகழ்வில் இயக்குனர் மற்றும் செல்வராகவனுக்கு “MOST IMPACTFUL PERFOMANCE OF THE YEAR” விருது சாணிக் காயிதம் திரைப்படத்துக்காக வழங்கப்பட்டது. இந்த விருதை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு வழங்கினார். விருது வாங்கிய பிறகு செல்வராகவன் மனைவி மேடைக்கு அழைக்கப்பட்ட போது அவர் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக பேசியது நெகிழ்ச்சியாக இருந்தது.

Selvaraghavan secret about acting with vijay in beast

விஜய்யுடன் இணைந்து நடித்த காட்சிகள்…

மேலும் செல்வராகவனிடம் பீஸ்ட் படத்தில் அவரும் விஜய்யும் சேர்ந்து நடிக்கும் காட்சி வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து, அப்படி இல்லாமல் போனது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய செல்வராகவன் “படத்தில் நாங்கள் சந்திப்பது போல காட்சி இருந்தது. ஆனால் எடிட்டிங்கில் அது போய்விட்டது போல. ஒரு சூப்பர் ஸ்டார் எப்படி உருவாகிறார் என்பதை அவரைப் பார்த்தபோது நான் தெரிந்துகொண்டேன். எதுவுமே அவ்வளவு எளிதாக கிடைக்காது என்பதை நான் அவரைப் பார்த்து புரிந்துகொண்டேன்” எனப் பேசியது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

Also Read | பிரபல ராப் கலைஞரோடு இணைந்த மாளவிகா மோகனன்… முதல் முறையாக… Exciting தகவல்

"BEAST- ல நானும் விஜய்யும் மீட் பண்ற SCENE… ஆனா" .. விருது விழாவில் செல்வராகவன் சொன்ன SECRET வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Selvaraghavan secret about acting with vijay in beast

People looking for online information on Beast, Behindwoods Gold Medal Awards, BGM 8, Selvaraghavan, Vijay will find this news story useful.