பிரபல நடிகர் சூர்யா நடிக்கவிருக்கும் திரைப்படத்தில், முன்னணி தெலுங்கு நடிகர் மோகன் பாபு இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

சூர்யா நடிப்பில் NGK வெளியாகி கலவையான விமர்சங்கள் பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. அவரது நடிப்பில் கேவி ஆனந்த் படமான காப்பான் முழு பணிகளும் முடிவுற்று ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
சூர்யா தன் படங்களை வெகு கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார். ஒரு படத்திற்கும் மற்றொரு படத்திற்கும் கதையில் நிறைய வித்தியாசங்கள் இருந்தால மட்டுமே படம் செய்கிறார். தற்போது சுதா கொங்குரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து வருகிறார். இறுதிச்சுற்று படத்திற்கு பிறகு சுதா கொங்குரா இயக்கும் படமென்பதால் இப்படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இப்படம் மிகப்பிரமாண்டமான முறையில் தயாராகி வருகிறது. ஒரு பைலட் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்ட படமென ஆரம்பகட்ட தகவலகள் தெரிவிக்கின்றன.
இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் சட்டீஸ்கரில் முடிவடைந்த நிலையில், அடுத்தக்கட்ட ஷூட்டிங் சென்னையில் இன்று (14.06.2019) துவங்கிவுள்ளதாக நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்நிலையில் “சூரரை போற்று” திரைப்படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மோகன் பாபு இணைந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன மோகன் பாபு தெலுங்கு சினிமா உலகில் 1970-களிலிருந்து பல வெற்றி படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது