"சூர்யா என்.ஜி.கே.வாகவே வாழ்ந்தார்" -செல்வராகவன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தன் என்.ஜி.கே. பட ஹீரோ சூர்யாவை பாராட்டி ட்வீட் செய்துள்ளார் இயக்குநர் செல்வராகவன்.

NGK Director Selvaraghavan's statement about NGK Suriya

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்த என்.ஜி.கே. படம் கடந்த 31ம் தேதி வெளியானது. படத்தை பார்த்தவர்கள் முடியல என்று தெரிவித்தாலும் வசூல் பாதிக்கவில்லை.

படம் ரிலீஸான 7 நாட்களில் உலக அளவில் ரூ. 100 கோடி வசூலித்துவிட்டதாகக் கூறி ஹேஷ்டேக் எல்லாம் போட்டு ட்விட்டரை தெறிக்கவிட்டார்கள் சூர்யா ரசிகர்கள்.

என்.ஜி.கே. படத்தில் நடித்தபோது சூர்யாவுக்கும், செல்வராகவனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது என்று கூறப்பட்டது. இயக்குநரை மாற்ற சூர்யா விரும்புவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. என்.ஜி.கே. ரிலீஸுக்கு முன்பு ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்த பேச்சுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்தார் சூர்யா. இந்நிலையில் செல்வராகவனும் தன் பங்கிற்கு ட்வீட் செய்துள்ளார்

என்.ஜி.கே. படத்தில் அருமையாக நடித்த சூர்யாவுக்கு நான் எப்பொழுதும் நன்றியுடன் இருப்பேன். அவர் ஓராண்டு காலமாக என்.ஜி.கே.வாகவே வாழ்ந்தார். அவர் எங்கள் அனைவருக்கும் ஆதரவாக இருந்தார். மிக்க நன்றி சார். நான் எப்பொழுதும் சொல்வது போன்று நீங்கள் இயக்குநர்களின் மனம் கவர்ந்தவர் என்று ட்வீட் செய்துள்ளார்