சூர்யா படத்தில் இணைத்த ஃபாஸ்ட் அண்ட் ஃபூயிரியஸ் பிரபலம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூர்யா நடிப்பில் NGK வெளியாகி கலவையான விமர்சங்கள் பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. அவரது நடிப்பில் கேவி ஆனந்த் படமான காப்பான் முழு பணிகளும் முடிவுற்று ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. 

Greg Powell, who has to his credit films like Skyfall, Fast and Furious, and Bourne Ultimatum, has joined the crew of the Suriya's Soorarai Pottru Sudha Kongara Directional

சூர்யா தன் படங்களை வெகு கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார். ஒரு படத்திற்கும் மற்றொரு படத்திற்கும் கதையில் நிறைய வித்தியாசங்கள் இருந்தால மட்டுமே படம் செய்கிறார். தற்போது சுதா கொங்குரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து வருகிறார். இறுதிச்சுற்று படத்திற்கு பிறகு சுதா கொங்குரா இயக்கும் படமென்பதால் இப்படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இப்படம் மிகப்பிரமாண்டமான முறையில் தயாராகி வருகிறது. ஒரு பைலட் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்ட படமென ஆரம்பகட்ட தகவலகள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு அதீத முக்கியத்துவம் உள்ளதால் தற்போது ஹாலிவுட் ஆக்சஷன் டைரக்டரை ஒப்பந்தம் செய்துள்ளனர். க்ரேக் பாவெல் இப்படத்தில் சண்டைக்காட்சிகளை அமைக்க உள்ளார். இவர் உலகளவில் பெரும் வெற்றி பெற்ற ஃபாஸ்ட் அண்ட் ஃபூயிரியஸ் படம் முதலாக பல ஹாலிவுட் படங்களுக்கு சண்டைக் காட்சிகள் அமைத்தவர்.

ஹாலிவுட் சண்டைக்காட்சிகளை அமைப்பவர் தமிழ்ப் படத்தில் பணியாற்றுவதை சூர்யா ரசிகர்கள் மிகப்பெருமையாக பகிர்ந்து வருகிறார்கள்.