செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த மே 31 ஆம் தேதி வெளியான படம் ''என்ஜிகே'. இந்த படத்தில் சாய் பல்லவி, ரகுல் பிரீத் சிங், பொன்வண்ணன் , பாலா சிங் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு ஆகியோர் தயாரித்திருந்தனர்.
இந்த படத்தில் சில காட்சிகள் குறித்து சமூகவலைதளங்களில் விவாதம் செய்யப்பட்டது. ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக தான் புரிந்துகொண்டதை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில், 'இந்த படத்தை பற்றிய விளாவரியாக அலசலாம் என்று முன்பு சொல்லியிருந்தேன்.
இந்த படத்தில் எப்பொழுது நந்த கோபாலன் குமரன், என்ஜிகேவா மாறுகிறான். உங்கள் பதிலை எனக்கு தெரியப்படுத்துங்கள். நான் அதில் ஒன்றை தேர்வு செய்து உங்களுக்கு சொல்கிறேன்' என்றார்.
As I said earlier let's start decoding #NGK gradually.
1. At exactly which moment in the film Nanda Gopalan Kumaran becomes # NGK?
Kindly let me your answer and I will the choose the right one tomorrow. Thanks friends. pic.twitter.com/oqjbmdzkRe
— selvaraghavan (@selvaraghavan) June 14, 2019